இருக்க பிரச்னையை முடிச்சிட்டு ஆரம்பிக்கலாம்… பிக்பாஸ்8ல் பழைய போட்டியாளர்கள் எண்ட்ரி!
Biggboss tamil: தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கும் நிலையில் சில பல புதிய முயற்சிகளை தயாரிப்பு நிறுவனம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பொதுவாகவே விஜய் டிவியில் எப்போதும் ரியாலிட்டி ஷோக்களில் புதுமை காட்டுவது வழக்கம். இந்த புதிய முயற்சியால் ரசிகர்களை கவர்வது தான் வாடிக்கையாக நடந்து வருகிறது. அதுபோலவே பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கடந்த ஏழு சீசன்களில் ஒவ்வொரு சீசனுக்கும் புதுமையான முயற்சியை கையாண்டு வருகிறது.
அந்த வகையில் இந்த சீசனில் மேலும் புதிய தொகுப்பாளருடன் களமிறங்க இருப்பதால் புகழை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதனால் பிக் பாஸ் எட்டாவது சீசன் போட்டியாளர் தேர்வு பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
அதில், அதிகபட்ச புது முகங்கள் இல்லாமல் ரசிகர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட முகமாக களம் இறக்கவே டிவி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாகவும் இதனை தொடர்ந்து விஜய் டிவியின் சீரியலில் நடித்த பிரபலங்களே அதிகமாக இந்த முறை பிக் பாஸ் சீசனுக்குள் உள்ளே வர இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற டேக்லைனை விஜய் சேதுபதி தன்னுடைய ப்ரோமோவிற்கு பயன்படுத்துகிறார். அதற்கேற்ற வகையில் தற்போது பிக் பாஸின் முதல் எபிசோட் தொடங்குவதற்கு முன்னர் பழைய போட்டியாளர்களை அழைத்து வந்து ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
விவாத நிகழ்ச்சியாக நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பக்கம் போட்டியாளர்களும் மற்றொரு பக்கம் ரசிகர்களும் அமர்ந்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏழு சீசன்களில் பதில் தெரியாமல் இருந்த பல கேள்விகளுக்கு பதில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இதனால் புதிய சீசனில் ரசிகர்கள் பழைய விஷயங்களை யோசிக்காமல் காண முடியும் எனவும் கூறப்படுகிறது. இதில் சில பிரபலங்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தாலும் சர்ச்சையில் சிக்கிய பல போட்டியாளர்கள் முடியாது என மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இந்நிகழ்ச்சிக்கான சூட்டிங் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.