டாட்டா காட்டப்பட்ட முதல் பெண் போட்டியாளர்.. பிக்பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர்தானா?
Biggboss Tamil: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் எட்டு நிகழ்ச்சியின் இந்த வார எலிமினேஷனில் முதல் முறையாக பெண் போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படி இருந்தும் முந்தைய சீசனுக்கு இந்த சீசன் ரசிகர்களிடம் பெரிய அளவில் தொய்வை சந்தித்து வருவதாக ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 8க்கு கிடைத்திருக்கும் ஓரளவு ரேட்டிங் விஜய் சேதுபதிக்காக மட்டுமே எனக் கூற வேண்டும்.
கடந்த சீசன் நிகழ்ச்சியை போல இந்த சீசனிலும் வீட்டை இரண்டாக பிரித்து இருந்தனர். ஒரு பகுதியில் ஆண்களும் இன்னொரு பகுதியில் பெண்களும் தங்கி வருகின்றனர். இந்த சீசனில் அதிக சீரியல் நடிகர்கள் அவர்கள் போடும் சண்டைகள் கூட திட்டமிட்டு செய்யப்படுவது போலவே காட்சியளிக்கிறது.
முதல் வாரத்தில் ரவீந்திரனும், இரண்டாவது வாரத்தில் சர்ச்சை நாயகன் அர்னவும் வெளியேறி இருந்தனர். இவர்கள் வெளியேறியதை விட அந்த வார எபிசோடுகளில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை ரசிகர்களுக்கு தோன்றும் அதே தொணியில் பேசியது மிகப்பெரிய அளவில் லைக்ஸ் குவித்தது.
இந்நிலையில் இந்த வார எலிமினேஷனுக்கான வார இறுதி இன்று வந்துவிட்டது. விஜய் சேதுபதி இந்த வாரம் நடந்த சர்ச்சைகளில் எதைப்பற்றி பேச போகிறார் யாரை காவு வாங்க போகிறார் என பல கேள்விகள் ரசிகர்களிடம் இருக்கிறது. அது ஒருபுறம் இருக்க இந்த வார நாமினேஷனில் அருண், தர்ஷா, அன்சிதா, ஜாக்லின், முத்துக்குமரன், சத்யா, சௌந்தர்யா உள்ளிட்ட 8 பேர் இருந்தனர்.
இவர்களில் நிகழ்ச்சியில் மிச்சர் சாப்பிட்டு வரும் சத்யா, அன்சிதா மற்றும் தர்ஷா மூவரும் டேஞ்சர் சோனில் இருந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சியிலிருந்து தர்ஷா வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது அவர் ரசிகர்களுக்கு கவலையாக இருந்தாலும் தர்ஷா நிகழ்ச்சிக்கு பெரிய கன்டெண்ட் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.