அம்மணி அரத பழசு… பிக்பாஸ் தமிழில் எக்ஸ்டாரா விஜய் டிவி பிராடக்ட்…
BiggbossTamil8: தமிழ் பிக்பாஸ் சீசன் 8 தற்போது நெருங்கி கொண்டு இருக்கும் நிலையில் தற்போது கலந்துக்கொள்ள இருக்கும் போட்டியாளர் குறித்த முக்கிய அப்டேட் கசிந்து இருக்கிறது.
100 நாட்கள் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வரும் அக்டோபர் ஆறாம் தேதி முதல் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இதுவரை 7 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன் இந்த சீசனில் இருந்து விலகி இருக்கிறார்.
அவருக்கு பதில் இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரோமோக்கள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
கடந்த சீசன் 2 வீடுகளால் ரசிகர்களிடம் அதிருப்தியை பெற்றது. இதனால் இந்த சீசனை காப்பாற்ற வேண்டும் என்பதால் தயாரிப்பு குழு மிகத் தீவிரமாக உழைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக பழைய சீசன் பொறியாளர்களை மக்களுடன் பேச வைக்கும் விவாத நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இதற்கிடையில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர் குறித்த உத்தேச தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. அந்த வகையில், சீரியல் நடிகர்களான அருண் பிரசாத், அர்னவ், அன்சிதா, வினோத் பாபு, பவித்ரா ஜனனி உள்ளிட்டோர் கலந்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது விஜய் டிவியில் ரொம்பவே பழைய பிரபலமான சுனிதாவும் நிகழ்ச்சிக்குள் களமிறங்க இருக்கிறார். இவர் நடன போட்டி மூலம் விஜய் டிவிக்குள் வந்தாலும் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் உள்ளே வந்தவர் தற்போது வரை அந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கெடுத்து வருகிறார்.
சமீபத்தில் கூட மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனையில் பேசி ரசிகர்களிடம் ட்ரோல்களை சந்தித்து வரும் சுனிதா நிகழ்ச்சிக்குள் வந்தால் தப்பிப்பாரா அல்லது எலிமினேட் ஆவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.