BiggbossTamil: உள்ளே வரும் ஐந்து பேர்.. வெளியேறும் 2 பெண் போட்டியாளர்கள்… பரபர அப்டேட்

by Akhilan |
BiggbossTamil: உள்ளே வரும் ஐந்து பேர்.. வெளியேறும் 2 பெண் போட்டியாளர்கள்… பரபர அப்டேட்
X

Biggboss Tamil: பிக் பாஸ் சீசன் எட்டு தொடங்கியதிலிருந்து பெரிய அளவில் ரசிகர்களிடம் ஆர்வமில்லாமல் சென்று கொண்டு இருந்தது.. ஆனால் வார இறுதி நாட்களில் தன்னுடைய பேச்சுக்களால் விஜய் சேதுபதி தற்போது இருக்கும் டிஆர்பியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

பொதுவாக பிக் பாஸ் தமிழ் தொடங்கியதிலிருந்து முடியும் நாட்கள் வரை ரசிகர்களிடம் ஆர்வம் மிகப்பெரிய அளவில் இருக்கும். அதற்கு முக்கிய காரணம் வரும் போட்டியாளர்கள் அனைவருமே புதிய முகங்களாக இருப்பார்கள். ஆனால் இது இந்த முறை தயாரிப்பு குழுவால் தவற விட்டு உள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் ஏகத்துக்கும் சீரியல் நடிகர்கள் உள்ளே வந்திருக்கின்றனர். இதனால் அவர்கள் சாதாரணமாக கண்டன்டுக்காக செய்யும் சில விஷயங்கள் கூட எடுபடாமல் போவதாக பேச்சுக்கள் அடிப்படை தொடங்கி இருக்கிறது.

இந்த சீசனின் முதல் எலிமினேஷன் ஆக பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வெளியேறினார். அடுத்த எலிமினேஷனில் சீரியல் நடிகர் அர்னவ் வெளியேற்றப்பட்டார். இவருக்கு தன்னுடைய மனைவி மீது இருந்த பிரச்சனையால் ரசிகர்களை அவரால் வெகுவாக கவர முடியாமல் போனது.

தொடர்ச்சியாக ஆண் போட்டியாளர்கள் வெளியேறி வந்த நிலையில் கடந்த வாரம் பெண் போட்டியாளரான தர்ஷா குப்தா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பொதுவாக பிக் பாஸ் தமிழ் சீசன்களில் பரபரப்பு குறையும்போது வைல்ட் கார்டு என்று உள்ளே நுழைவார்கள். அவர்கள் வந்து விஷயத்தை சொல்ல ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும்.

இதுதான் கடந்த சீசனிலும் நிகழ வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனா டைட்டிலை தட்டி சென்றார். இதனால் தற்போது இந்த சீசனிலும் புதிய போட்டியாளர்கள் வரவை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சீரியல் நடிகர் இல்லாமல் புது முகங்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால் தற்போது தீபாவளி தினத்தை முன்னிட்டு 5 புது போட்டியாளர்கள் உள்ளே சென்று இருக்கின்றனர்.

இதில் முதல் போட்டியாளராக விஜய் டிவி காமெடி பிரபலமான டி எஸ் கே உள்ளே சென்று இருக்கிறார். அவரைத் தொடர்ந்து பிரபல நடிகை லட்சுமியின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா உள்ளே சென்று இருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மூன்று போட்டியாளர்கள் உள்ளே செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது.

5 போட்டியாளர்கள் உள்ளே செல்வதால் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இரண்டு பெண் போட்டியாளர்களான சுனிதா மற்றும் அன்சிதா இருவரும் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Next Story