பிரதீப்புக்கு நியாயம்.. சுனிதாவுக்கு இல்லையா? கமலின் சூப்பர் தீர்ப்பை பாலோ செய்வாரா VJS?

by Akhilan |
பிரதீப்புக்கு நியாயம்.. சுனிதாவுக்கு இல்லையா? கமலின் சூப்பர் தீர்ப்பை பாலோ செய்வாரா VJS?
X

Biggboss: பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் நடந்த அதே பிரச்சனை தற்போது சீசன் எட்டிலும் நடந்திருக்கிறது. அந்த பிரச்சனைக்கு கமல் ரசிகர்கள் ரசிகம்படியாக ஒரு தீர்ப்பை கொடுத்தார். தற்போது இதே போன்ற ஒரு தீர்ப்பை விஜய் சேதுபதி தருவாரா என கேள்வி எழுந்திருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7ன் குறிப்பிட்ட பொருளை எடுக்க நடத்தப்பட்ட டாஸ்க் பிரதீப் ஆண்டனியை சக போட்டியாளரான விஜய் வர்மா கழுத்தை அழுத்தி பிடித்து லாக் செய்து இருப்பார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. அவரின் கடுமையான போக்கை கண்டித்த கமல்ஹாசன்.

இனி இது போல் பிக்பாஸில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது என முதல் எச்சரிக்கையாக மஞ்சள் கார்டை கொடுத்தார். இது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நேற்று நடந்த பிக் பாஸ் சீசன் 8ல் இதை போன்ற ஒரு டாஸ் நடந்திருக்கிறது.

அதில் சுனிதாவை தடுக்க சக போட்டியாளரான முத்துக்குமரன் அவர் கழுத்தை அழுத்தி பிடித்து லாக் செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. விஜயவர்மாவிற்கு கொடுத்தது போல முத்துக்குமரனுக்கும் எச்சரிக்கை விடப்படுமா? இல்லையா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சீசன் தொடங்கியதில் இருந்து கமலஹாசனின் போக்கை எங்குமே காட்டி விடாதபடி விஜய் சேதுபதி தன்னுடைய ஸ்டைலில் தொகுத்து வழங்கி வருகிறார். பொதுவாக கமல்ஹாசன் எந்த விஷயத்தையும் நேராக சொல்லாமல் குட்ட வேண்டிய இடத்தில் சரியாக குட்டியிடுவார். ஆனால் அவருக்கு நேர் எதிராகவே விஜய் சேதுபதி கையாண்டு வருகிறார்.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் படி தேவையான இடத்தில் முகத்திற்கு நேராக கேட்டு விட பலர் இதை வரவேற்கின்றனர். ஆனால் சிலரிடம் இது இன்னமும் பிரச்சினையாக உருவாகி இருக்கிறது. கடந்த வாரம் எலிமினேட்டான வெளியில் வந்து பாய்ஸ் டீமை தரக்குறைவாக பேச, உடனே அதை விஜய் சேதுபதி நிறுத்தினார்.

இது பலரிடம் லைக் குவித்தாலும், சிலர் விஜய் சேதுபதியின் போக்கை கண்டித்து வருகின்றனர். இதனால் இந்த பிரச்சனைக்கு வார இறுதியில் என்ன மாதிரியான தண்டனை கொடுக்கப்படும் என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.

Next Story