தரமான சம்பவம் இனிமேதான் இருக்கு! பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே போகும் பிரபலம்
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். எந்த சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசன் பெரும்பாலும் விஜய் டிவி பிரபலங்களே ஆக்கிரமித்து இருக்கின்றனர்.
ஜாக்குலின், விஷால், அருண், அக்ஷிதா, ரஞ்சித் என பெரும்பாலான போட்டியாளர்கள் விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள் தான். இந்த நிலையில் பிக் பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் உள்ளே போக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவருக்கும் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருக்கும் அர்ணவுக்கும் இடையே ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்து போலீஸ் வரை சென்ற சம்பவம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். அர்ணவின் மனைவிதான் திவ்யா. இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பல பிரச்சனைகள் ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்றிருந்தனர்.
தனது கணவர் அர்ணவ் மீது திவ்யா பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அவருக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டார் திவ்யா. கேளடி கண்மணி தொடரில் நடித்ததன் மூலம் அர்ணவ் மற்றும் திவ்யா ஆகிய இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.
அப்போதிலிருந்தே இவர்கள் காதலிக்க தொடங்கினர். ஒரே வீட்டிலும் வாழ்ந்து வந்தனர். 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்த இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தான் அர்ணவ் தன்னை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார் திவ்யா.
இப்படி மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பல குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில் செல்லமா சீரியலில் நடித்ததன் மூலம் அந்த சீரியலில் லீடு ரோலில் நடித்த அன்சிதாவுடன் அர்ணவ் நெருக்கமாக இருப்பதாகவும் திவ்யா கூறி வந்தார். இதற்கிடையில் பிக் பாஸிலும் அன்சிதா மற்றும் அர்ணவ் இருவரும் உள்ளே சென்று இருக்கின்றனர்.
இந்த நிலையில் திவ்யா திடீரென ஒரு ரீல்ஸ் வீடியோ போட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார். அதில் ‘என்னை தூக்கி எறிஞ்சிட முடியும். என்ன மாதிரி ஒருத்தன உன்னால் கண்டுபிடிக்கவே முடியாது. தேடு. நீ பார்க்கிற ஒவ்வொருத்தனுக்குள்ளேயும் என்னுடைய கேரக்டரை தேடு. முடிஞ்சா கண்டுபிடி ’என ஒரு பிரபல பட வசனத்திற்கு ரீல்ஸ் போட்டு தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார் திவ்யா.
இது ஒரு புறம் இருக்க திடீரென ஏன் இந்த வீடியோவை போட்டார். ஒருவேளை பிக் பாஸ் வீட்டில் அர்னவ் மற்றும் ஹன்சிதா இருவரும் ஒன்றாக விளையாடுவதை பார்த்த திவ்யா அர்ணவுக்காக இதை போட்டிருப்பாரா என்ற கோணத்திலும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் பிக் பாஸில் வைல் கார்டு எண்ட்ரியாக திவ்யா போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு வேளை அவர் பிக் பாஸ் வீட்டில் வைல் கார்டு எண்ட்ரியாக நுழைந்தாl தரமான சம்பவம் இருக்கிறது. குறிப்பாக அர்னவ் மற்றும் அன்சிதாவின் செய்கைக்கு பதிலடி கொடுக்கும் பட்சத்தில் திவ்யாவின் எண்ட்ரி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.