பிக்பாஸில் சிவகார்த்திகேயன் அணிந்த தேசிய கொடி மறைக்கப்பட்டதுக்கு காரணம் இதான்!..

by Akhilan |
பிக்பாஸில் சிவகார்த்திகேயன் அணிந்த தேசிய கொடி மறைக்கப்பட்டதுக்கு காரணம் இதான்!..
X

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷனிற்காக நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்திருக்கும் இடையில் தற்போது ஒரு சர்ச்சை உலா வந்து கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தொடக்கத்திலிருந்து இந்த சீசன் பெரிய அளவில் தொய்வை மட்டுமே சந்தித்து வருகிறது. பெரிய அளவில் விஜய் டிவி பிரபலங்களை உள்ளே வந்திருப்பதால் ரசிகர்களுக்கும் ஆர்வம் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இருந்தும் விஜய் சேதுபதியின் வார இறுதி தொகுப்பை காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். இதற்கு காரணம் அவர் தேவையான நேரத்தில் போட்டியாளர்களுக்கு வைக்க வேண்டிய கொட்டை சரியாக வைத்துவிடுகிறார். இதனால் அவருடைய பேச்சு இணையதளங்களில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளே எண்ட்ரி கொடுத்திருந்தார். அவர் நடிப்பில் அமரன் திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதனால் படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாகி இருக்கிறது.

இதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய தாய்வீடு போன்ற விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸிற்குள் உள்ளே சென்றார். அங்கே தன்னுடைய ட்ரைலரை போட்டு காண்பித்து போட்டியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்ததும் ப்ரோமோக்களாக வெளியானது.

அதை தொடர்ந்து எபிசோடுகளில் அந்த காட்சிகளும் ஒளிபரப்பப்பட அதில் சிவகார்த்திகேயன் அணிந்திருந்த தேசியக்கொடி பிளர் செய்யப்பட்டிருந்தது தான் தற்போதைய சர்ச்சைக்கு காரணமாகி இருக்கிறது. இந்த செயலுக்கு விஜய் டிவியை பலர் கண்டனம் தெரிவித்து வருவதையும் பதிவுகளாக பார்க்க முடிகிறது.

ஆனால் இந்திய சட்டத்தின் படி தேசியக் கொடியை செவ்வக வடிவத்தில் தான் அணிய வேண்டும். நிகழ்ச்சியில் சிவக்கார்த்திகேயன் வட்டமாக தேசிய கொடியை அணிந்திருந்ததால் தான் அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல், பிளர் செய்யப்பட்டதாகவும் விளக்கங்கள் வெளியாகி வருகிறது.

Next Story