பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நடிகர் சிவகார்த்திகேயன்… வெளியான சூப்பர் புரோமோ!..

by Akhilan |
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நடிகர் சிவகார்த்திகேயன்… வெளியான சூப்பர் புரோமோ!..
X

VijayTv: தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிரபலமாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 8ல் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளே வந்திருப்பது குறித்த புரோமோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்து இருக்கிறது. நிகழ்ச்சியை முதல் முறையாக கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தொடக்கத்திலிருந்து தன்னுடைய தக் லைஃப் கேள்விகளால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

இந்நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பெரிய அளவில் வைரலாகவில்லை. தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகர் ரஞ்சித் இடையான சண்டை மட்டுமே பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்க அதுவும் கடைசியில் பிராங்க் எனக் கூறி ரசிகர்களை கோபப்படுத்தினர்.

இந்நிலையில் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் இருவரும் டீம்களாக பிரிந்து விளையாடி வருகின்றனர். பல வாரங்களைக் கடந்து பிக் பாஸில் முதல் முறைய வார டாஸ்க் நடைபெற்றது. இதில் ஆண்கள் அணியை பெண்களும், பெண்கள் அணியை ஆண்களும் மாற்றி மாற்றி விமர்சித்துக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கும் புதிய புரோமோ வெளியாகி இருக்கிறது. ஆரவாரத்துடன் உள்ளே வரும் சிவகார்த்திகேயன் கார்டனின் அமர்ந்து போட்டியாளர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் அவரின் அமரன் திரைப்படத்தின் புரோமோஷனுக்கு உள்ளே வந்திருக்கும் சிவகார்த்திகேயன் அங்கு ட்ரைலரையும் போட்டு காட்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன், ரெபெக்கா வர்கீஸாக சாய் பல்லவி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story