லோகேஷோடு ரோலக்ஸ் மட்டுமல்ல... இன்னொரு படமும் இருக்கு..! தெறிக்க விட்ட சூர்யா

by sankaran |
surya lokesh
X

கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் கங்குவா. இந்தப் படத்திற்கு 350 கோடி வரை பட்ஜெட் என்கிறார்கள். இந்தப் படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்றும் பேசப்படுகிறது. பீரியடு பிலிமாகத் தயாராகி உள்ளது.

இந்தப் படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். திஷா பதானி, ஜெகபதி பாபு, நட்டி, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்திற்காக இரு பாடல்களை விவேகா எழுதியுள்ளார்.

இந்தப் படத்திற்கான புரொமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. படத்திற்கான பிரஸ் மீட்டும் நடந்துள்ளது. சூர்யா பேசும்போது, ரோலக்ஸ் கதாபாத்திரம் நான் வெறும் அரை நாள் மட்டும் தான் ஷூட் பண்ணினேன். ஆனால் இந்த அளவுக்கு ஒரு லவ்வும், கிரேஷூம் அந்த கேரக்டருக்குக் கிடைத்துள்ளது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.


லோகேஷ் கூட என்னை சந்தித்து நம்ம ரோலக்ஸ்க்காக ஒரு தனி படம் பண்ணலாம்னு சொன்னார். நாங்க இருவரும் இது தொடர்பாக ரெண்டு மூணு முறை சந்தித்துப் பேசினோம். ரோலக்ஸ் அல்லது இரும்பு கை மாயாவி என்ற பெயரில் அந்தப் படம் வரலாம். அதற்கான வேலைகளும் ஒரு பக்கம் போய்க்கொண்டு தான் இருக்கிறது. இதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று தெரிவித்துள்ளார்.

விக்ரம் படத்தில் கிளைமாக்ஸில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் வந்து சூர்யா மிரட்டி இருப்பார். அது ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே ரீச்சாகி விட்டது. எங்கு பார்த்தாலும் ரோலக்ஸ் ரோலக்ஸ்னு கூப்பிடுற அளவுக்கு வந்துவிட்டது. அதனால் இந்த ரோலக்ஸ் முழுபடமாக வரும்பட்சத்தில் ரசிகர்களுக்கு அது பெரிய கூஸ்பம்ப்ஸ் ஆக இருக்கும் என்றே நம்பலாம். அவர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய விருந்தாக அமையும்.

மீண்டும் மீண்டும் லோகேஷை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. அதனால் தான் படம் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வந்து சேரவில்லை. சிங்கம் 4, கஜினி2, கைதி 2 என பிசியாக சூர்யாவின் படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

Next Story