Bigg boss Tamil:முகம் சுழிக்க வைக்கிறாரா விஜய் சேதுபதி...?! அட்வைஸ்ங்கற பேருல எல்லாமே நோஸ்கட்டா இருக்கே..!
பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்ததில் இருந்தே விஜய்சேதுபதின்னதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் கமல் இடத்தில் அவரான்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சாங்க. ஆனாலும் அவர் தன்னோட வழி தனி வழின்னு சொல்றா மாதிரி ரூட்டை மாத்திட்டாரு.
ஆனாலும் கமல் வீடியோவைப் பார்த்துத் தான் நிறைய ஒர்க் அவுட் பண்ணினதாகவும் சொல்றாங்க. விஜய் சேதுபதி முதல் நாளில் துவக்கவிழா அன்றே தன் பாணியைக் காட்ட ஆரம்பித்து விட்டார்.
கமலைப் பொருத்தவரை ஒரு போட்டியாளர் தவறு செய்தால் அவரை நேருக்கு நேராக எடுத்தோம், கவிழ்த்தோம்னு பேசி விடமாட்டார். அவருக்கு அவர் செய்த தவறை உணரும் வகையில் சிம்பாலிக்காக சொல்வார். ஆனால் விஜய் சேதுபதி அதில் இருந்து மாறுபடுகிறார்.
நேருக்கு நேராக 'பட்'டென்று பேசி விடுகிறார். 'சொல்ல வந்த விஷயத்தை சுற்றி வளைச்சிப் பேசாதீங்க. டப் டப்னு சொல்லிடுங்க'ன்னு போட்டியாளர்களுக்கும் அட்வைஸ் கொடுக்கிறார். இது பல நேரங்களில் ரசிக்கும்படியாக இருந்தாலும் அது போட்டியாளர்கள் பக்கம் இருந்து பார்த்தால் அவர்களது மனதைக் காயப்படுத்துகிறது என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் கூனிக் குறுகிப் போய்விடுகிறார்கள்.
போட்டியை நடத்துபவர் என்றால் அவர் எல்லாப் பக்கமும் சிந்திக்க வேண்டும். தன்னோட டார்கெட்டை மட்டும் பார்க்கக் கூடாது. குறிப்பாக நேற்று அர்னவை வெளியேற்றும்போது அவர் மனதைக் காயப்படுத்தும் வகையில் பேசி விடுகிறார்.
அர்னவ் செய்தது தவறாகவே இருந்தாலும் அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்லி இருக்கலாம். இங்க வந்து உங்க வன்மத்தைக் கக்காதீங்கன்னு டப்புன்னு சொன்னதும் அர்னவ் அப்படியே நிலைகுலைந்தாற்போல ஆகி விட்டார். விஜய்சேதுபதியும் அப்படி சொல்லிவிட்டு ஆடியன்ஸ் பக்கம் பார்த்துக் கொள்கிறார். தனக்கு எதிராக யாராவது குரல் கொடுக்கிறார்களா என்று.
குறிப்பாக போட்டியாளர் ரஞ்சித்தோட ப்ரண்டு ஒருவர் விஜய்சேதுபதியிடம் 'எங்க ஊரு பக்கம் எல்லாம் யாராவது வந்தா சாப்டீங்களா?'ன்னு தான் கேட்பாங்கன்னாரு. அதுக்கு 'எல்லா ஊருலயும் அப்படித்தான் கேட்பாங்க'ன்னு விஜய்சேதுபதி நோஸ்கட் பண்ணி விட்டார்.
அதேபோல எந்தப் போட்டிளாராக இருந்தாலும் அதைக் கவனித்துப் பார்க்கும்போது அட்வைஸா, நோஸ்கட்டா என்ற கேள்வி தான் நம் மனதில் எழுகிறது. விஜய் சேதுபதிக்கு வேண்டுமானால் அது தனி ரூட்டாக இருக்கலாம். ஆனால் இதை உலகம் முழுவதும் உள்ள ஆடியன்ஸ் பார்க்கிறாங்க. அவங்களுக்கும் போய் அவர் சொல்கிற கருத்துகள் சேருகிறது.
விஜய்சேதுபதி படங்களில் பேசுவது போல இந்த நிகழ்ச்சியில் பேசினால் வேலைக்கு ஆகாது. ஆரம்பத்தில் நல்லா இருந்தாலும் அது போகப் போக எரிச்சலை உண்டு பண்ணிவிடும். கிட்டத்தட்ட இந்தியில் சல்மான்கான் தான் பிக்பாஸ் நடத்திக் கொண்டு இருக்கிறார். அவரும் இப்படித்தான் 'பட் பட்'னு போட்டியாளர்களின் முகத்தில் அடித்தாற் போல பேசி விடுவாராம்.
ஒரு கட்டத்தில் அவர்கள் அழுதே விடுவார்களாம். ஒருவேளை அதைக் காப்பி அடிக்கிறாரோ விஜய் சேதுபதி என்றே எண்ணத் தோன்றுகிறது. அதனால் அன்பாகப் பேசி காரியத்தை சாதிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.