நான் கமல்ஹாசன் இல்ல… பக்கா வில்லன்… பிக்பாஸ் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த விஜய் சேதுபதி!...
Biggboss Tamil: நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய முதல் வார பிக்பாஸ் தமிழ்8 தொகுத்து வழங்கி இருக்கிறார். எங்கும் பிசிறாமல் நெத்தியடி பேச்சால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.
விஜய் சேதுபதி முதல்முறையாக பிக்பாஸில் கமல்ஹாசன் இடத்துக்கு வர இருக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இவரால் கமலின் கெத்தை செய்ய முடியுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் தான் பக்கா வில்லன் என்பதை முதல் இண்ட்ரோவிலேயே விஜய் சேதுபத் நிரூபித்து விட்டார்.
சரி முதல் வாரத்தை எப்படி ஓட்டுவார் பார்க்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. அதை மாஸாக செய்தும் முடித்து இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த சீசன் பிக்பாஸ் தமிழின் முதல் வாரத்தின் முதல் எபிசோட் நேற்று ஒளிபரப்பானது.
ஆனால் ஆரம்பம் முதலில் சிக்ஸ் என அடித்து ஆட தொடங்கினார். ரவீந்தர் பேசிக்கொண்டு இருக்கும் போதே 'வழவழனு பேசாதீங்க சார். நான் உங்க போட்டியாளர் இல்லை. எனக்கு போர் அடிக்குது..நான் உங்க கண்டெஸ்டண்ட் இல்ல. என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாதீங்க' என நெத்தியடியாக பதில் சொல்லினார்.
அதுமட்டுமல்லாமல் தர்ஷா குப்தா மற்றும் ஜாக்குலினிடம் பேசும்போது 'அடுத்தவர்கள் பேசும்போது காது வலிக்குது, கூல் டவுன், அமைதியா பேசுங்க என தூண்டுவது போல பேசாதீங்க. நீங்க பேசுறதை மத்தவங்க பேசின போது அவங்க பேசுனா நீங்க கேட்கணும்' என மூக்கை உடைத்தார்.
நடிகை தர்ஷாவிடம் எதுக்கு அந்த சைட் எடுத்தீங்க எனக் கேட்டபோது சிங்கிள் பெட் இருக்கு. கிச்சன் பக்கத்துல இருக்கு என பதில் அளித்தார். அதற்கு விஜய் சேதுபதி 'நீங்க விளையாட வந்து இருக்கீங்க. சாப்பிடுறதுக்கா இப்படி சூஸ் பண்ணுவீங்க?' என அதிரடியாக பேசினார்.
அதுமட்டுமல்லாமல் தேவையான இடத்தில் பேசிவிட்டு அமைதி காக்கும் சுனிதாவை மொக்கை பண்ணுவது போல அவர் மிக்சர் தின்னுவதையும் கலாய்த்தார். இப்படி பிக்பாஸ் தமிழ் ரசிகர்களுக்கு கமலை விட விஜய் சேதுபதி டாப்புதான் என பேச வைத்து இருக்கிறார் என்பதுதான் உண்மை.