பிக் பாஸ்ல ஹோஸ்ட் முக்கியமில்லை!.. கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே ஒரே போடு.. விஜய் சேதுபதி ரூட்டே வேற!..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான நிலையில் விஜய் சேதுபதி இந்த வாரம் சனிக்கிழமை எபிசோடில் பேசி கலக்கியுள்ளார். துவக்க விழா நிகழ்ச்சியிலேயே கமல்ஹாசன் இடத்தை சரியாக விஜய் சேதுபதி கையாண்டுள்ளார் என பலரும் பாராட்டினர்.
இந்த வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ரவீந்தர் வெளியேறியுள்ளார். ரவீந்தர் மற்றும் ஜாக்குலின் அதிகபட்சமாக ஆறு நாமினேஷன்களை பிடித்திருந்தனர்.
ஜாக்குலின் இந்த வாரம் பெரிதாக விளையாடவில்லை என்றாலும் ஆஃப்லைன் ஓட்டிங்கில் அவர் கடைசி இடத்தில் இருந்தாலும் விஜய் டிவி அவரை காப்பாற்றி விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ரவிந்தர் வெளியேற காரணமே பாலாஜி முருகதாஸ் சமீபத்தில் யூடியூப் சேனலில் ரவீந்தர் பற்றிய உண்மைகளை போட்டு உடைத்தது தான் காரணம் என்றும் கூறுகின்றனர்.
முதல் 24 மணி நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாச்சனா மீண்டும் வீட்டுக்குள் வந்த நிலையில், இந்த சீசனில் முதல் வாய்ப்பை இழப்பது ரவீந்தர் தான். அவரது உடலை வைத்துக்கொண்டு அவரால் எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில் கஷ்டப்பட்டு ஒரு வாரம் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம் என்றும் கூறுகின்றனர்.
ரவீந்தர் மற்றும் ரஞ்சித் பிளான் செய்து பண்ண பிராங்க் தான் இந்த வாரத்திற்கான பெரிய கன்டென்ட் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் சாதுரியமாக பேசி தனது விளையாட்டை ரவீந்தர் ஆடி வந்தாலும் அழுது புலம்பிய ஜக்குலினை காப்பாற்றி ரவீந்தரை வெளியேற்று உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹோஸ்ட் முக்கியம் இல்லை என்றும் கன்டஸ்டன்ட்கள் தான் ரொம்பவே முக்கியம் என விஜய் சேதுபதி தற்புகழ்ச்சி இல்லாமல் பேசியதை பார்த்த ரசிகர்கள் கமல்ஹாசனையே தூக்கி சாப்பிட்டு விட்டார் என்று பாராட்டி வருகின்றனர்.