நடிகர் ரஜினி திடீரென நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே, அவருக்கு என்ன பிரச்சனை… அவருக்கு என்னாச்சு என்கிற பதட்டம் அவரின் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.
இதுபற்றி விளக்கமளித்த அவரின் மனைவி லதா ‘ஒவ்வொரு வருடமும் அவரின் உடல் பரிசோதனை செய்வது வழக்கமான ஒன்றுதான். ஒரு நாள் அவர் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்’ என தெரிவித்தார். சாதாரண உடல் பரிசோதனை எனில் எதற்கு ஒரு நாள் ரஜினி மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் என்கிற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுந்தது.
அதேநேரம், அவருக்கு Necrosis எனும் ரத்தகுழாய் திசு அழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. காவேரி மருத்துவமனையில் 5வது மாடியில் சாதாரண அறையில்தான் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர் எனவும், கவலைப்படும்படியாக எதுவும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘ரஜினிகாந்தின் மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. எனவே, அதை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் உடல் நலம் தேறி வருகிறார். சில நாட்களுக்கு பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விஜய் டிவியில்…
SK_ Keerthi…
ஞானவேல் ராஜா…
Good bad…
கங்குவா திரைப்படத்தில்…