More
Categories: Flashback latest news

இளையராஜாவுக்குக் கடவுள் கொடுத்த சக்தி எது தெரியுமா? பிரபலம் பகிர்ந்த ஆச்சரியம்!

இளையராஜா தமிழ்சினிமா உலகிற்கு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அடி எடுத்து வைத்தார். தொடர்ந்து தனது தனித்துவமான இசையால் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார். இசை என்றால் என்ன என்றே தெரியாதவர்களுக்குக் கூட அதன் அருமையை உணரச் செய்தார்.

80களில் அவரது இசையில் உருவான பாடல்கள் அப்போது வானொலி நிலையங்களுக்கு ஒரு ஊட்டச்சத்தாக இருந்தன. எந்த நிலையத்துக்குத் திருப்பினாலும் இளையராஜாவின் பாடல்கள் தவறாமல் இடம்பிடித்தன. அந்த வகையில் அவரது இசையை தினமும் கேட்காமல் எந்த ரசிகர்களும் இருக்க முடியாது. அப்படிப்பட்டவர் தான் பிற்காலத்தில் இசைஞானி ஆனார்.

Advertising
Advertising

இசைஞானி இளையராஜா தமிழ்த்திரை உலகம் மட்டும் அல்லாது இப்போது இசை சாம்ராஜ்யத்துக்கே பெரிய ஆச்சரியம். இன்று சிம்பொனி உள்பட பல சாதனைகளைப் படைத்து விட்டார். ரீ ரெக்கார்டிங்க்ல இளையராஜாவின் தனித்துவமான இசை உருவாவதற்கான காரணம் குறித்து அவரது ரிதம் கண்டக்டர். சேஸ் டிரம்மர் புருஷோத்தமன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

purushothaman ilaiyaraja

ஆரம்பத்துல இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட கிட்டாரிஸ்ட்டா ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்தார். அங்க வேலை செய்தது போக ப்ரீ டைம்ல தானே உட்கார்ந்து நோட்ஸ் எழுதுவாராம். ஞாயிற்றுக்கிழமை எல்லாம் ஒரு கிளப் ஹவுஸ்ல பிராக்டிஸ் பண்ணுவோம். வரப்பிரசாதம் படத்துக்கு மியூசிக் டைரக்டர் ஆர்.கோவர்த்தன். ஆனா அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாமே இளையராஜாதானாம். அப்பவே எல்லாருக்கும் பிரமிப்பா இருந்தது. சவுண்டை வந்து பேப்பர்ல எழுதுற ஒரே ஆளு ராஜாசார்தான். மியூசிக்கையே இளையராஜா இமேஜின் பண்றாரு.

உள்வாங்கற திறமை அவருக்குக் கடவுள் கொடுத்த சக்தி. அதே மாதிரி அவர் அபாரமான ஞாபகசக்தி திறமை உள்ளவர். நோட்ஸ், கலரை ஞாபகம் வச்சிக்கலாம். ஆனா சவுண்டை சொல்வாரு. அதுல கரெக்ஷன் சொல்வாரு. அதைக் கேட்டாதான் நமக்கு புரியும். லிரிக்ஸ்சும், ராகங்களும் சேர்ந்தா எப்படி பிரயோகிக்கலாம் அப்படிங்கறதுக்கு புது டைமண்ஷனைக் கொடுத்தது இளையராஜாதான். அந்த விஷயத்துல உலகத்துலயே இவர்தான் பர்ஸ்ட் என்கிறார் புருஷோத்தமன்.

Published by
sankaran v

Recent Posts