நம்மளையே ஓவர்டேக் பண்றாரே... விஜய்க்கு எதிராக சீமானைத் தூண்டிவிட்டாரா ரஜினி?

by sankaran v |
vijay rajni seeman
X

vijay rajni seeman

தமிழக வெற்றிக்கழகம் கட்சியை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாகத் தொடங்கி சில மாதங்களுக்குள் கட்சிக்கொடி அறிவிப்பு, கொள்கை, மாநாடு நடத்தி அசத்தினார் தளபதி விஜய். அது பல்வேறு கட்சிகளுக்குள் ஒரு கிலியை உண்டாக்கியது. அதனால் பல விமர்சனங்களையும் சந்தித்தார். அவை எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் சமீபத்தில் மாநாட்டுக்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தடபுடலாக விருந்தும் அளித்து கௌரவித்தார்.

Also read: நீங்க வேற லெவல்!.. அது என்னால முடியாது!.. பார்த்திபனுடன் நடிக்க மறுத்த ரஜினி!..

தளபதி 69தான் தனது கடைசி படம். அதன்பிறகு முழுநேர அரசியல்வாதி என்றும் அறிவித்து விட்டார். இப்போது மீடியாக்களில் விஜயின் அரசியல் பற்றி நாளுக்கு நாள் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அந்தவகையில் தற்போது விஜய்க்கு எதிராக சீமானைத் தூண்டி விட்டாரா ரஜினி என்பது குறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் தகவல் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

Anthanan

Anthanan

நேரடியா ஒருத்தன் நம்மைப் பார்த்து வளர்ந்த பையன் விஜய். இன்னைக்கு என்னைத் தாண்டிப் போயிட்டு என்னையே விமர்சனம் செய்றாரே என்ற கோபம் ரஜினிக்கு நிச்சயம் இருக்கும். காக்கா கழுகு கதை எல்லாம் சொன்னது, நம்மோட ஸ்டைலை எல்லாம் செஞ்சி சினிமாவுல வளர்ந்து வந்த பையன் விஜய். இதெல்லாம் ரஜினிக்கு கண்டிப்பா இருக்கும்.

seeman rajni

seeman rajni

சீமானை ரஜினி சந்தித்ததுக்கு சினிமாவுக்காக அல்ல. வேட்டையனைப் பாராட்டவும் அல்ல. ஆனா ஒரு நோக்கம் இருக்கும். இன்னும் விஜயை நல்லாத் திட்டுங்க. ஹேப்பியா இருக்கேன். உங்க பின்னாடின்னு கூட சொல்லிருக்கலாம். ஆனா அவரு எந்;தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க மாட்டார். 2026 அரசியல்ல இதுதான் நிச்சயம் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் ரஜினியை சீமான் சந்திச்சதில் இருந்து விஜய்க்கு எதிராக அவரைப் பேச வைக்கிறார் என்றும் தெரிகிறது. அதே போல ரஜினி ரசிகர்களின் ஆதரவு தனக்கு வரவேண்டும் என்ற எண்ணத்திலும் சீமான் ரஜினியை சந்தித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Next Story