More
Categories: Flashback latest news

ரஜினி ஸ்டைல் எல்லாம் இப்படித்தான் வந்துச்சா? முள்ளும் மலரும் படத்துல முதல்ல ஹீரோயின் அவரா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரது ஸ்டைல்தான். அது எப்படி அவருக்கு வந்ததுன்னு பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி சில விசேஷ தகவல்களைத் தந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

ரஜினிகாந்த் நடக்குற ஸ்டைல் சிவாஜி எங்கேயோ ஒரு இடத்துல நடந்த நடைதான். 50 வருஷமா ரஜினி அந்த நடையைத் தான் நடந்துக்கிட்டு இருக்கு. ரஜினியை ஏதாவது ஒண்ணு உனக்குன்னு பண்ணுப்பான்னு பாலசந்தர் சொல்லி இருக்கிறார். அப்ப தான் அவர்கள் படத்துல கண்ணாடியை சுழற்றிப் போடுற ஸ்டைலைக் கொண்டு வந்தார் ரஜினி.

Advertising
Advertising

அதே மாதிரி மூன்று முடிச்சு படத்துலதான் சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயால பிடிக்கிற ஸ்டைலைக் கொண்டு வந்தாரு. இது வடமாநிலங்கள்ல ஒரு சிலர் பண்ணின ஸ்டைல். அதுக்கு அப்புறம் சிகரெட்டை வத்திப்பெட்டி இல்லாமல் தீக்குச்சியை அடுத்தவன் கையில உரசிப் பத்தவச்சாரு. இது மாதிரி பல விஷயங்களை ரஜினி ஸ்டைலாகப் பண்ணினார்.

ரஜினியின் படங்களில் அடுத்த லெவலுக்குக் கொண்டு சென்றது யாருன்னா அது இயக்குனர் மகேந்திரன். இவரது முள்ளும் மலரும் படம். அதுல ரஜினியின் நடிப்பும், படத்தின் வெற்றியும் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. முதல்ல இந்தப் படத்துல ரஜினிக்கு ஜோடி லதா. அப்புறம் எம்ஜிஆருக்குத் தெரிஞ்சி கட்டளை போடுறாரு. வேற வழியே இல்லாம அந்தப் படத்தை டிராப் பண்றார் தயாரிப்பாளர் வேலு செட்டியார்.

அப்புறம் ஹீரோயினானவர்தான் படாபட் ஜெயலட்சுமி. அந்தப் படத்துல கூட செந்தாழம்பூவில் பாட்டை எடுக்க தயாரிப்பாளர் பட்ஜெட் பிரச்சனைன்னு சம்மதிக்கல. அதுக்குக் கமல் பணம் கொடுத்ததும்தான் அந்தப் பாடலையே எடுத்தார்களாம். அதே மகேந்திரன் இயக்கத்தில் கைகொடுக்கும் கை. அடுத்தும் மகேந்திரன் ரஜினியை வைத்துப் படம் எடுக்க நினைக்கிறார். ஆனால் ரஜினி போதும். இனி நான் பார்த்துக்குறேன்.

rajni

கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்து ரஜினியின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு எடுத்தவர் சாண்டோ சின்னப்பா தேவர். பைரவி படத்தை எடுத்தவர் கலைஞானம். அவருக்கு நிதி உதவி பண்ணியது சின்னப்பா தேவர். அவர்தான் ரஜினியை வைத்து படம் எடுன்னு தைரியமாக கலைஞானத்திடம் சொன்னாராம். அப்புறம் ரஜினிக்கு தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம் படங்கள் எல்லாம் தேவர் பிலிம்ஸில் வந்து மாபெரும் வெற்றி பெற்றன.

தேவர் இறந்தபிறகு ரஜினி நன்றி மறவாமல் இருந்துள்ளார். கலைஞானத்துக்கு வீடு வாங்கிக் கொடுத்தாராம். அதே போல தேவரின் மகன் தண்டாயுதபாணியின் கடனை அடைக்க தர்மத்தின் தலைவன் படத்தில் நடித்துக் கொடுத்தாராம். இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v