Vijay vs SAC: விஜய்க்கும், அவரது தந்தைக்கும் பிரச்சனை வர காரணமான அந்த சம்பவம்..! பிரபலம் சொல்லும் தகவல்
ரஜினிக்கு 'சூப்பர்ஸ்டார்' என்ற அந்தஸ்தைக் கொடுத்த படம் பைரவி. இந்தப் படத்தின் இயக்குனர் எம்.பாஸ்கர். இவரது மகனும், தயாரிப்பாளருமாக இருப்பவர் பாலாஜி பிரபு. இவர் ஆஸ்கர் மூவீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். விஜய், சங்கவி நடிப்பில் விஷ்ணு என்;ற படத்தைத் தயாரித்தவரும் இவர் தான்.
கமாண்டிங் டைரக்டர்
விஜய்க்கு மிகப்பெரிய அளவில் பிசினஸை ஏற்படுத்தக் காரணமாக இருந்த முதல் படமே இதுதான் என்கிறார் அவர். அதுமட்டுமல்லாமல் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்ஏசி.க்கும் பிரச்சனை வர என்ன காரணம் என்றும் அவரே சொல்கிறார். பார்க்கலாமா...
விஜய் சாரை ஒவ்வொரு காலகட்டமும் எஸ்ஏசி சார் வளர்த்து விட்டார். எஸ்ஏசி ரொம்ப ஸ்டிரிக்டான கமாண்டிங் டைரக்டரா இருந்தார். ஒரு ஸ்டேஜ்க்கு மேல விஜய் சார் மிகப்பெரிய நடிகராக உருவெடுக்கிறார். அந்த நேரத்துல நம்ம வளர்த்துவிட்ட பையன்னு எஸ்ஏசி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்தாரு.
விஷ்ணு சூட்டிங்
ஒரு காலகட்டத்துல பையன் தலை எடுக்கும்போது அப்பாவுக்கும், மகனுக்கும் எல்லா பேமிலியிலுமே ஒரு முரண்பாடான காலகட்டம் வரும். பையன் தலை எடுக்கும்போது இதைச் செய், அதைச் செய்னு அப்பா சொல்லும்போது அதைக் கேட்கக்கூடிய மனநிலையில மகன் இருக்க மாட்டாரு. விஜய் சாருக்கும், எஸ்ஏசி சாருக்கும் முரண்பாடு வர்றதுக்குக் காரணமே இது தான்.
விஷ்ணு படத்திலேயே பிரசாத் ஸ்டூடியோவுல எல்லாம் சூட்டிங் நடக்கும்போது எஸ்ஏசி சார் எதுவும் சொன்னாருன்னா கோவிச்சிக்கிட்டு காரை எடுத்துக்கிட்டு விஜய் சார் வீட்டுக்குப் போயிடுவாரு. செட்ல வைச்சி எதுவும் சொல்லமுடியாதுன்னு போயிடுவாராம். எஸ்ஏசி சார் தனியா ஒரு சேர் போட்டு மூட் அவுட்டா உட்கார்ந்துருப்பாரு.
ஷோபா அம்மா சமாதானம்
அப்புறம் ஷோபா அம்மா காரை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போய் விஜய் சார்க்கிட்ட அப்படி எல்லாம் பண்ணக்கூடாதுடா தங்கம், இது நம்ம படம் இல்ல. வேறொருத்தர் தயாரிப்புன்னு சொல்லி கன்வின்ஸ் பண்ணி அடுத்த அரை மணி நேரத்துக்குள்ள கூட்டிட்டு வருவாங்க. அப்போ விஜய் சின்ன பையனா இருந்தாரு. 19 வயசுப் பையனுக்குள்ள மெச்சூரிட்டி இருந்தது. அப்புறம் ஷோபா அம்மா எஸ்ஏசி சார்க்கிட்ட போய் நீங்க ஏதும் சொல்லாதீங்கன்னு சொல்வாரு.
கருத்து வேறுபாடு
அவரு அப்படியே முறைச்சிப் பார்ப்பாரு. அந்தப் படத்திலேயே மூணாறுல சூட்டிங் நடக்கும்போதும் நிறைய கருத்து வேறுபாடு வரும். அது ஒரு காலகட்டத்தில பெரிய சண்டையா வந்ததுக்கும் கூட இதுதான் காரணம். ஆனாலும் இப்போ அப்பாவுடைய ஆலோசனைகளை விஜய் சார் கேட்டுக்கறது இல்லன்னு நான் கேள்விப்பட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.