விக்ரம் அப்படி பேசுனதுல என்ன தப்பு இருக்கு? வரிந்து கட்டிக்கொண்டு வரும் பிரபலம்
விக்ரம் சர்ச்சை பேச்சுபத்திரிகையாளர்களிடம் இப்படி பேசுவாரா என்ற பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து பிரபல வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...
தங்கலான் படத்தை விக்ரம் ரொம்பவே நம்பினார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தன்னோட சம்பளத்தை உயர்த்தலாம் என்று மற்ற படங்களை ஒத்துக்காமல் இருந்தாராம். ஆனால் அந்தப் படத்தின் ரிலீஸ் லேட்டானதால் ஒரு கட்டத்தில் நாம் வருகிற படங்களை எல்லாம் தள்ளிப் போட்டுக்கொண்டே போனால் இன்னும் ஒரு நீண்ட கேப் விழுந்து விடக்கூடாது என்று நினைத்தாராம்.
அதனால் தான் வீர தீர சூரன் படத்திற்கு ஒத்துக் கொண்டாராம். தங்கலான் படத்தின் வெற்றியை ருசித்ததும் இன்னும் நல்ல கதைகள் அவரைத் தேடி வரும். அதை செலக்ட் பண்ணலாம் என்றும் எண்ணினாராம். விக்ரமை இன்னொரு நடிகருடன் கம்பேர் பண்ணி அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்காங்க. உங்களுக்கு இல்லையேன்னு சொல்றது ரொம்ப மனவேதனையைத் தரும் விஷயம்.
அவர் வந்து எவ்வளவு காலம் சினிமாவுல இருக்காரு. எவ்வளவு வெற்றிப்படங்களைக் கொடுத்துருக்காரு. எவ்வளவு தோல்விப்படங்களைக் கொடுத்துருக்காரு. அப்படியே தோல்விப்படங்களைக் கொடுத்தாலும் அதுல எவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சிருக்காருன்னு பார்க்க வேண்டும்.
இதே கேள்வியை வேற ஒரு நடிகரிடம் கேட்டால் என்னவாயிருக்கும்? அவர் பொது இடத்துல அநாகரிகமாக நடந்து கொள்ளக்கூடாதுன்னு அப்படி சிரிச்சிக்கிட்டே பதில் சொல்றது தான் டாஸ்க். அதனால அவருக்கு வாழ்த்து சொல்லணும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பிற நடிகர்களின் ரசிகர்களுடன் ஒப்பிட்டு கேள்வி கேட்டார் ஒரு நிருபர். உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று அவரிடம் விக்ரம் கேட்ட போது என் பெற்றோர் என்றார் அந்த நிருபர். அதற்கு ஏன் உங்கள் மனைவி குறித்துப் பேசவில்லை அவர் ஓடிப் போய்விட்டாரா என்றும் கேட்டதால் அந்தப் பேச்சு சர்ச்சைக்குள்ளானது.