ரஞ்சித்தின் புதிய படத்துக்கு எதிர்ப்பு...ஏ சர்ட்டிபிகேட்தான் கொடுப்போம்...இது என்னடா சோதனை!....

அட்டக்கத்தி திரைப்படம் மூலம் இயக்குனரானவர் பா.ரஞ்சித். முதல் திரைப்படமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அடுத்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படமும் வெற்றி பெற்றது. அப்படத்தில் வட சென்னை வாசிகள் வசிக்கும் இடங்களில் இருக்கும் அரசியல் பற்றி பேசியிருந்தார்.

ranjith_main_cine

அடுத்து அவர் ரஜினியை வைத்து அவர் இயக்கிய கபாலி படத்திலும் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கான அரசியல் இருக்கும். அதேபோல், காலா படத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை, அரசியல்வாதிகள் அவர்களின் இடத்தை எப்படி சுரண்ட நினைக்கிறார்கள் என காட்டியிருப்பார்.

ranjith2_cine

அடுத்து வட சென்னைவாசிகளின் பூர்வீக விளையாட்டான குத்துச்சண்டையை மையமாக வைத்து அவர் உருவாக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அப்படத்திற்கு பின் அசோக் செல்வன்,காளிதாஸ் ஜெயராம்,கலையரசன் போன்ற இளம் நடிகர்களை வைத்து ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்திலும் சாதி பற்றிய சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

natchathiram

இந்நிலையில், இப்படத்தில் முழுக்க முழுக்க பிற சமூகங்களை தவறாக காட்டி இருப்பதாக்வும், ஜாதி, மத கலவரத்தை உருவாக்கும்படியான காட்சிகள் இருப்பதாகவும், அவற்றை நீக்க வேண்டும் எனவும் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது. அதோடு, படத்திற்கு ஏ சான்றிதழ் மட்டுமே கொடுப்போம் எனவும் கூறியுள்ளனராம்.

இந்த விவகாரம் ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தலைவலியை கொடுத்துள்ளது.

Related Articles
Next Story
Share it