Actor MGR: பொதுவாக எம்ஜிஆர் படங்களில் சமூகத்தை சீர்குலைக்கும் எந்த காட்சிகளும் இருக்காது. அதை எம்ஜிஆரும் விரும்பமாட்டார். அவர் நடித்த எந்த படத்திலும் எம்ஜிஆர் குடிக்கிற மாதிரியான, புகைப்பிடிக்கும் காட்சிகளில் பெரும்பாலும் நடித்திருக்க மாட்டார். தன்னால் தன் ரசிகர்கள் கெட்டு போக கூடாது என்பதை விரும்புபவர் எம்ஜிஆர். இதுவே சமுதாயத்தில் எம்ஜிஆரை ஒரு தலைசிறந்த தலைவராக மக்கள் முன் பிரதிபலித்ததற்கு காரணமாக அமைந்தது.
சமீபகால படங்களில் அதுவும் ஓடிடி என்ற ஒரு ஃப்ளாட்ஃபார்ம் வந்ததில் இருந்தே சமுதாயம் கெட்டு சின்னாபின்னமாக போகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. தியேட்டரில் வெளியாகும் படங்களில் ஓரளவாவது சென்சார் என்ற ஒரு அமைப்பு தலையிட்டு எது வேண்டுமோ அதை மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால் ஓடிடியில் எந்த சென்சாரும் கிடையாது.
இதையும் படிங்க: மனோஜ் மற்றும் ரோகிணியை மிரளவிட்ட விஜயா… அடடே! நல்லா சூடு பிடிக்குதே!
அதனால் தாராளமான காட்சிகள், கெட்ட வார்த்தைகள் என இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு போக வழிவகுக்கின்றது. இந்த நிலையில் எம்ஜிஆர் படத்தில் ஒரு பாடலின் வரியில் முத்தம் என்ற வார்த்தைக்கு சென்சார் தடை விதித்த சம்பவம் தான் இன்று வைரலாகி வருகின்றது. எம்ஜிஆரை வைத்து ஆர். எம், வீரப்பன் தயாரித்த படம் ‘தெய்வத்தாய்’.
அந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்திருப்பார். அந்தப் படத்திற்கான பாடல்களை வாலி எழுத அதில் ஒரு பாடலின் வரியில் ‘கன்னத்தில் முத்தமிடவா’ என்ற வார்த்தை அமைந்திருக்கும். அதை படமாக்குவதற்கு முன் சென்சார் அதிகாரியிடம் ஒரு முறை கேட்டுவிடலாம். இல்லையெனில் படமாக்கியபின் சென்சார் தலையிட்டு அதில் முத்தம் என்ற வார்த்தை இருக்கிறது என்று கட் செய்ய சொல்வார்கள் என வீரப்பன் எண்ணி ஒரு அதிகாரியிடம் கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: நானும் சூர்யாவும் ரெடி.. பெண் இயக்குனர்களுக்கு தில்லாக சவால் விட்ட ஜோதிகா
அந்த காலத்தில் சென்சாரில் மிகவும் பிரபலமான அதிகாரியாக இருந்தவர் சாஸ்த்ரி. அவரிடம் போய் கேட்டிருக்கிறார் வீரப்பன். உடனே சாஸ்த்ரி ‘இவ்ளோ தயக்கம் இருந்தால் ஏன் அந்த வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள்? உங்களுக்கே சந்தேகம் இருக்கும் போது மாற்றுவதுதானே சரி’ என சொல்லியிருக்கிறார். அதன் பிறகு கன்னத்தில் முத்தமிடவா என்பதற்கு பதிலாக ‘கன்னத்தில் கிள்ளிவிடவா’ என்று மாற்றப்பட்டதாம். ஆனால் இப்போதுள்ள சினிமா எந்த பாதையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பதை இந்த ஒரு சம்பவம் மூலமே நமக்கு நன்கு புலப்படும்.
கங்குவா திரைப்படத்தில்…
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…