Jananaygan: சென்சாருக்கு 4 வாரம் வேணும்!.. ஜனநாயகன் ரிலீஸ் அவ்ளோதானா?!…

Published on: January 7, 2026
jananayagan
---Advertisement---

நடிகர் விஜய் நடித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த படம் வருகிற 9ம் தேதி ரிலீஸ் என ஏற்கனவே அறிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் 18ம் தேதி சென்சார் அதிகாரி படம் பார்த்தார்கள்.

அப்போது அவர்கள் சில மாற்றங்களை சொல்ல அதையும் படக்குழு செய்து 25 ஆம் தேதி கொடுத்துவிட்டனர். ஆனால் பல நாட்களாகியும் சென்சார் கொடுக்காமல் இருந்தனர். ரிலீஸுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

Also Read

பொதுவாக ஒரு வாரத்தில் சென்சார் சான்றிதழ் கொடுத்துவிடுவார்கள். ஆனால், ஜனநாயகன் படத்திற்கு வேண்டுமென்றே சென்சார் சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். இதில் உள்ள நோக்கம் இருக்கிறது. இதனால் 500 கோடி வியாபாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது வழக்கு இன்று தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் தணிக்கை வாரியம் தனது தரப்பு வாதங்களை முன்வைத்த போது ‘நிபுணர்களின் ஆலோசனை பெறாமல் ஜனநாயகம் படத்தில் பாதுகாப்பு படையின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சென்சார் கொடுப்பதற்கு முன்பே நீதிமன்றத்தை அணுகியது தவறு.. இன்னும் சில அதிகாரிகள் படத்தை பார்க்க வேண்டி இருக்கிறது.. எனவே இந்த படத்திற்கு சென்சார் கொடுக்க இன்னும் நான்கு வாரங்கள் தேவைப்படும்’ என சொன்னது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என தெரிகிறது. தற்போது வெளியாகி வரும் செய்திகளை பார்க்கும்போது ஜனநாயகம் 9ம் தேதி வெளியாகுமா என்கிற கலக்கம் விஜய் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.