விஜயின் ஜனநாயகன் படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. படம் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் சென்சார் பிரச்சினையால் படம் வெளியாகுமா இல்லையா என்கிற குழப்பமே ஏற்பட்டிருக்கிறது. இது விஜய் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்நிலையில்தான் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் தரப்பிலும், படக்குழு தரப்பிலும் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுப்பதில் என்ன சிக்கல் என தணிக்கை வாரியம் தரப்பில் வைத்த வாதங்களை பற்றி பார்ப்போம்.
Also Read
நாளை மறுதினம் படம் ரிலீஸ் ஆன கூறி சென்சார் சான்றிதழ் கேட்க முடியாது. கடந்த மாதம் 18ம் தேதிதான் படக்குழு விண்ணப்பித்திருக்கிறது. விதிகளின்படியே நாங்கள் முடிவெடுக்க முடியும். வாரியத்தின் டைம்லைனை பின்பற்றித்தான் ஆக வேண்டும். ஒரு திரைப்படம் வெளியாகாமல் தடுக்க தணிக்கை குழுவிற்கு சட்டம் அதிகாரம் கொடுத்துள்ளது.

காட்சிகளை நீக்க வேண்டும் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்றால் படக்குழு செய்துதான் ஆக வேண்டும். சான்றிதழ் வழங்கும் முன்பு, மறுக்கும் முன்பு மனுதாரர் நீதிமன்றத்தை அணுக முடியாது. சென்சார் சான்றிதழ் தருவதாக கூறிவிட்டீர்கள் அதை கொடுங்கள் என கேட்டு பட குழு நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது.
படம் மறு ஆய்வுக்கு அனுப்புவது குறித்து ஜனவரி 5ஆம் தேதியே தணிக்கை வாரியம் தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவித்துவிட்டது. நாளை மறுதினம் படம் ரிலீஸ் ஆன கூறி சென்சார் கேட்க முடியாது.. பரிசீலனை குழுவில் இடம் பெறாத உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய குழுவால் இந்த திரைப்படம் மறுபடி பார்க்கப்பட வேண்டும்.. குழு உறுப்பினர் பரிந்துரையில் திருப்தி இல்லை என்றால் மறு தணிக்கை செய்ய சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உண்டு.
படத்தில் ராணுவ படைகளின் இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதால் அந்த துறை நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்து முடிக்க சென்சாருக்கு கால அவகாசம் வேண்டும்’ என வாதங்களை முன் வைத்திருக்கிறார்கள்.



