நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து போது ஜனநாயகன் தனது கடைசிப் படம் என அறிவித்தார். அரசியலுக்கு வந்தாலே பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.. அப்படி ஒரு சிக்கலை ஜனநாயகனும் சந்தித்தது. இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழை தணிக்கை வாரியம் கொடுக்கவில்லை.. அதோடு ரிலீஸுக்கு சில நாட்கள் இருக்கும்போது படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என சொன்னதால் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு ஒரு மாதமாக நீதிமன்றத்தில் இருந்தும் தீர்வு கிடைக்கவில்லை..
நிலைமையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர் கடந்த பிப்ரவரி 5ம் தேதி வழக்கை வாபஸ் பெற்றார். அதோடு மறுதணிக்கைக்கும் விண்ணப்பித்தார்.. விதிமுறைப்படி மறு தணிக்கைக்கு விண்ணப்பித்தால் 40 நாட்களுக்குள் படத்தை அதிகாரிகள் பார்க்க வேண்டும். ஆனால், தணிக்கை வாரியத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. 40வது நாளான நேற்று தணிக்கை வாரியத்திடமிருந்து தயாரிப்பாளருக்கு ஒரு மெயில் வந்திருக்கிறது.. அதில் நாளை(இன்று) மதியம் 2 மணிக்கு படம் பார்க்கிறோம்.. ஏற்பாடு செய்யுங்கள் என சொல்லியிருக்கிறார்கள்.. அதன்பின் மீண்டும் ’2 மணிக்கு இல்லை.. 3 மணிக்கு படம் பார்க்கிறோம்’ என சொல்லியிருக்கிறார்கள்..
இந்த மெயில் வந்தபோது தயாரிப்பாளரும், ஹெச்.வினோத்தும் வெளிநாட்டில் இருந்தனர். மெயில் வந்ததும் அவர்கள் இருவரும் உடனடியக இந்தியா வந்துவிட்டனர். ஆனால் நேற்று இரவு 9.30 மணியளவில் தணிக்கை வாரியத்திடம் இருந்து ஒரு மெயில் வந்திருக்கிறது.. அதில் படம் பார்க்கவிருந்த அதிகாரிகளில் ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை.. எனவே நாளை படம் பார்க்க முடியாது.. எப்போது மீண்டும் படம் பார்க்கிறோம் என்பதை நாளை அறிவிக்கிறோம்’ என சொல்லியிருக்கிறார்கள்..
அதாவது சரியாக 40 வது நாளில் படம் பார்க்க வேண்டும் என அறிவித்துவிட்டு அன்று இரவு அதிகாரிக்கு உடல் நலம் சரியில்லை.. அதனால் வேறு தேதியை சொல்கிறோம் என சொல்லி மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது தணிக்கை வாரியம்.. கண்டிப்பாக இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது..






