அப்பாவியாக நடித்த சைதன்யா… சமந்தாவை பழிகடாவாக்கிய வக்கிர பின்னணி…

by Akhilan |
அப்பாவியாக நடித்த சைதன்யா… சமந்தாவை பழிகடாவாக்கிய வக்கிர பின்னணி…
X

NagaChaitanya: சமந்தாவை பிரிந்த நடிகர் நாகசைதன்யா தற்போது சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். இந்த இரண்டாவது திருமணத்தால் அவருடைய சினிமா வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிப்பை அடையாதபடி அவர் செய்த அப்பாவி டிராமா குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக இருந்தவர் நடிகை சமந்தா. அவர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டதும் ரசிகர்கள் இந்த ஜோடியை பெரிய அளவில் கொண்டாடினர். திடீரென சமந்தா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதும் பலருக்கு அது அதிர்ச்சியாக அமைந்தது.

இதையும் படிங்க: சினிமாவை விட்டே போறேன்னு சொல்லிட்டு யூடர்ன் அடித்த திரை பிரபலங்கள்!.. ஆனாலும் சூப்பர் ஹிட்டுதான்!..

இந்த பிரச்சனைக்கு சமந்தா தான் காரணம் என பேச்சுக்கள் எழுந்தது. சைதன்யாவை விவாகரத்து செய்வதன் மூலம் பெரிய அளவிலான தொகையை சமந்தா பெற்றார் என கூறப்பட்ட நிலையில் அவர் எனக்கு யாருடைய பணமும் தேவை இல்லை என ஓப்பனாக கூறி தன்னுடைய நிலையை தெரிவித்தார். இருந்தும் விவாகரத்து குறித்து வேறு எதுவும் சமந்தா தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.

ஆனால் அவருடைய பேட்டிகளில் தன்னுடைய வலியை பலவிதங்களில் தெரிவித்து இருப்பார். சைதன்யாவோ இது குறித்து எதுவும் பேசாமலே வாய் திறக்காமல் இருந்தார். நாகர்ஜுனாவின் புகழை கொஞ்சம் கூட எட்டாமல் இருந்த சைதன்யா சமந்தாவின் அதீத வளர்ச்சியால் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த கடுப்பில் தான் அவருக்கு திருமண உறவில் இருக்கும் போது சோபிதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் நெருக்கம் சமந்தாவின் காதுகளுக்கு செல்ல சைதன்யா மீது அளவு கடந்த காதலில் இருந்தவருக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால்தான் விவாகரத்து முடிவை எடுத்தார் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அந்த விவகாரத்திற்கே காரணம் சோபிதாதான்… வெளியான வைரல் புகைப்படம்…

மேலும், சோபிதா மற்றும் சைதன்யா குறித்த கிசுகிசுக்கள் 2022 ஆம் ஆண்டிலிருந்து வலம் வருகிறது. இதனால் இருவருக்கும் சமந்தா விவாகரத்து முடிவிற்கு முன்னரே பழக்கம் வாய்ப்பு இருக்கிறதாக கூறப்படுகிறது. மேலும் இதுவரை தன்னுடைய இன்ஸ்டாவில் சமந்தா படத்தை எடுக்காமல் அவரை பாலோ செய்து வந்த நாக சைதன்யா தன்னை கடைசிவரை அப்பாவியாகவே காட்டிக் கொண்டிருக்கிறார்.

சோபிதாவுடனான திருமண அறிவிப்பு வரும் சில நாட்களுக்கு முன்பே சமந்தாவை அன்பாலோ செய்து படங்களை நீக்கினார். இதில் மேலும் ஒரு வக்கிரமாக சைதன்யாவிற்கு சமந்தா ப்ரபோஸ் செய்த ஆகஸ்ட் 8ஆம் தேதியை தேர்வு செய்தது ரசிகர்களால் மோசமாக விமர்சிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது,

Next Story