கண்ணதாசன் தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் ஒருவர். இவர் தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் பாடல்களை எழுதியுள்ளார். இவரின் பாடல்களுக்கு ரசிகர்கள் ஏராளம். இவரின் பாடல் வரிகளை கேட்டால் மனதிற்கு இனிமையானதாக இருக்கும். இவர் பாடலாசிரியர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியரும் கூட. திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.
இவரின் பாடல்களில் ஒரு உயிரோட்டம் இருக்கும். அச்சம் என்பது மடமையடா என்ற பாடலை கேட்கும் பொழுது நமக்கு ஒரு வித மனதைரியம் ஏற்படும். மூன்றாம் பிறை திரைப்படத்தில் உள்ள கண்ணே கலைமானே பாடல்தான் இவர் எழுதிய கடைசி பாடல்.
இதையும் வாசிங்க: கோபத்தில் பிரிந்த கண்ணதாசன் – சிவாஜி.. பிரிந்த இரு துருவங்களையும் சேர்த்த அந்த அழகான பாடல்…
அதனைபோல் அந்த காலத்தில் மிகச்சிறந்த காமெடி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சந்திரபாபு. இவர் பல திரைப்படங்களில் கமெடியனாக நடித்திருந்தார். இவரை வைத்து கவலை இல்லாத மனிதன் என்ற திரைப்படத்தினை கண்ணதாசன் இயக்கினார். பொதுவாக சந்த்திரபாபு படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டாராம். அதனை போல் இப்படத்திலும் செய்துள்ளார். படம் முழுவதும் நடித்து கொடுத்துவிட்டு கிளைமாக்ஸில் நடிப்பதற்கு பேசிய சம்பளத்தை விட அதிக சம்பளம் தந்தால் மட்டுமே நடிக்க வருவதாக கூறியுள்ளார்.
பின் கிளைமாக்ஸ் சீனின் போது படபிடிப்புக்கு வராமல் இருந்துள்ளார். கண்ணதாசன் நேரில் சென்று அழைத்தபோது பின் கேட் வழியாக ஓடிவிட்டாராம். பின் எப்படியோ இப்படத்தை முடித்துள்ளனர். இப்படம் மிகுந்த தோல்வியையும் சந்தித்துள்ளது. இதனால் மனமுடைந்த கண்ணதாசன் இவரை திட்டி ஒரு கவிதை எழுதியுள்ளார். அக்கவிதையை கண்ட சந்த்திரபாபு அவருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் வாசிங்க: கோபப்படுத்திய இயக்குனர்!. கடுப்பில் 58 பல்லவிகளை எழுதி கொடுத்த கண்ணதாசன்!.. அட அந்த படமா?!..
அக்கடிதத்தில் ”கண்ணதாசன் என்னை மிகச்சிறந்த நடிகர் இல்லை என்று கூறியுள்ளார். நான் அப்படி மிகச்சிறந்த நடிகராக இல்லாமல் இருந்திருந்தால் அவர் எப்படி அவரின் படத்திற்கு கதாநாயகனாக என்னை தேர்வு செய்திருக்க முடியும். மேலும் அழகிய தமிழ் மொழியினை என்னை இவ்வாறு திட்டுவதற்கே பயன்படுத்தியுள்ளார். படத்தில் நடிக்க கூடுதல் சம்பளம் கேட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை எனவும் தான் பின் கேட் வழியாக சென்றதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.
நாம் எவ்வளவு நாள் வாழ போகிறோமோ தெரியாது. ஆனால் நான் இறந்துவிட்டால் என்னை வாழ்த்தி இரு வரிகளாவது பாடல்களை எழுதுங்கள்” என அக்கடிதத்திற்கு விடை கொடுத்துள்ளார். இவரின் வார்த்தைகளை கேட்கும் பொழுது இவர் மேல் தவறு உள்ளதா அல்லது கண்ணதாசன் மேல் தவறு உள்ளதா என்பது தெரியவில்லை. அதை நாம் சொல்லவும் முடியாது. ஆனால் இவரின் பதில் கடிதத்தை பார்க்கும் பொழுது இவர் தனது தவறை உணர்ந்து பேசியுள்ளார் என்று தெரிகிறது.
இதையும் வாசிங்க: இருபது நிமிட சீனை மூன்றே நிமிட பாடலில் சொன்ன கண்ணதாசன்.. படக்குழுவையே வியப்பில் ஆழ்த்திய கவியரசர்..
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…