தற்கொலைக்கு முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு... வாயை வைத்தே ரிலீஸான சுவாரஸ்ய பின்னணி...
நடிகர் சந்திரபாபு மிகப்பெரிய திறமைசாலி தான் இருந்தாலும் அவரின் அலட்சியபோக்கினாலே வளர்ந்த அதே வேகத்தில் கீழேயும் விழுந்தார். அப்படிப்பட்ட சந்திரபாபு வாய்ப்புக்காக பட்ட மிகப்பெரிய சோகங்களும் இருக்கத்தான் செய்தன.
எம்.ஜி.ஆர் முன்னணி நாயகனாக நடித்த படங்களில் காமெடியனாக சந்திரபாபு நடித்திருப்பார். தியேட்டர்களில் சந்திரபாபு சீன்களுக்கு விசிலும் கைதட்டலும் அதிகம் கிடைத்திருக்கிறது. இவரின் நடிப்பிலும் குரலிலும் ஒலித்த பாடல்களான புத்தியுள்ள மனிதரெல்லாம், பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே, நானொரு முட்டாளுங்க, ஒண்ணுமே புரியல உலகத்தில போன்ற பாடல்கள் ஆண்டுகளை கடந்தும் இன்னும் தமிழ் நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், முதல் சில வருடங்கள் வாய்ப்புக்காக பல இடங்களில் ஏறிய சந்திரபாபுவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் ஒரு கட்டத்தில் மிகவும் வெறுத்து போய் தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் அதிலும் ஏமாற்றம் தான் உண்டானது. தற்கொலைக்காக அவர் மீது வழக்கு போடப்பட்டு கைது செய்து அவரை நீதிபதி முன்னர் நிறுத்தினர்.
ஏன் இவ்வாறு செய்தீர்கள் என நீதிபதி அவரிடம் கேட்டபோது, ஒரு தீக்குச்சியை கொண்டு அவர் கையை சுட்டுக் கொண்டார். பின்னர், நான் சுட்டது தான் உங்களுக்கு தெரியும். இதன் வலியை என்னால் தான் உணர முடியும் எனக் கூறினாராம். இதில் நிறைந்து இருந்த அவரின் வலியை உணர்ந்த நீதிபதி, அறிவுரை கூறி விடுதலை செய்தாராம்.