Cinema History
நிச்சயம் முடிந்த பெண்ணிடம் ஏடாகூடமா பேசிய சந்திரபாபு… மானத்தை வாங்கிய பெண்ணின் தந்தை…
தமிழ் சினிமாவில் தனது காமெடிகளிம் மூலம் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் சந்திரபாபு. இவர் நடிப்பை மட்டும் வெளிப்படுத்தாமல் தனது மற்ற திறமைகளான நடனம், பாடல் பாடுவது என மற்ற திறமைகளையும் வெளிக்காட்டியவர்.
இவர் தமிழில் முதன்முதலில் அறிமுகமான திரைப்படம்தான் தன அமராவதி. இப்படத்திற்கு பின் இவர் மோகன சுந்தரம், சபாஷ் மீனா, பாத காணிக்கை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவரும் கூட.
இதையும் வாசிங்க:நான் எப்ப அவர் மாதிரி ஆகுறது!. நடிகையிடம் புலம்பிய ரஜினிகாந்த்.. இவ்வளவு நடந்திருக்கா?!..
இவர் பொதுவாக ஆணவம் பிடித்த நடிகரும் கூட. எம்ஜிஆரையே மிஸ்டர் ராமசந்திரன் என்றுதான் அழைப்பாராம். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் இவரே பாடல்களையும் பாடியுள்ளார். குங்கும பூவே கொஞ்சும் புறாவே, ஒன்னுமே புரியல உலகத்திலே போன்ற பல வெற்றிப்பாடகளையும் பாடியுள்ளார்.
இவரது வாழ்வில் திருமண வாழ்க்கை என்ற அதிர்ஷ்டமே இல்லாமல் போனது. இவர் ஆரம்பத்தில் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். பின் தனது காதலை தனது பெற்றோர்களிடம் கூட அவர்களும் சம்மதித்துள்ளனர்.
இதையும் வாசிங்க:டைரக்டர் சொல்லியும் கேட்கல!.. அந்த நடிகர்தான் வேணும்.. சர்ச்சை நடிகருக்கு சப்போர்ட் பண்ணிய அஜீத்…
பின் பெரியவர்கள் சம்மதத்துடன் இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. நிச்சயம் முடிந்த உடனே சந்திரபாபு அப்பெண்ணிடம் ‘ஊட்டிக்கு போகலாமா?’ என கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் ‘என்ன ஊட்டிக்கா?’ என கேட்டுள்ளார். மேலும் ‘இது இந்தியா அப்படியெல்லாம் வர முடியாது… என் அப்பாவிடம் கேட்டு கொள்ளுங்கள்’ என கூறிவிட்டாராம்.
உடனே அப்பெண்ணின் தந்தை நிச்சயம் முடிந்த உடனேயே ஊட்டிக்கு அழைக்கிறார் என்பதால் கோபப்பட்டுள்ளார். அதற்கு சந்திரபாபு நிச்சயம் முடிந்தால் பாதி திருமணம் முடிந்த மாதிரிதானே என கூறியுள்ளார். கோபப்பட்ட அப்பெண்ணின் தந்தை திருமணத்தையே நிறுத்திவிட்டாராம். சந்திரபாபுவும் தனது மோதிரத்தை கழட்டி கொடுத்துவிட்டு வந்துவிட்டாராம். இப்படியே இவரின் முதல் காதல் முடிந்து போனதாம்.
இதையும் வாசிங்க:ஹெல்ப் பண்றேன்னு போய் விளம்பரம் தேடிய நயன்தாரா!.. இதெல்லாம் ரொம்ப சில்லியா இருக்கே!