ஒரு ரூபாய்க்கு சண்டை போட்ட சிவாஜி!.. மனதில் வைத்து பழிவாங்கிய சந்திரபாபு!..

by சிவா |
chandrababu
X

சில நடிகர்கள் அவர்கள் சந்திக்கும் அவமானங்களை மறக்கவே மாட்டார்கள். அதிலும், அதை மனதில் வைத்து அவர்களுக்கான நேரம் வரும்போது அதை பழிதீர்த்துவிடுவார்கள். இதற்கு உதாரணமாக திரையுலகில் பல சம்பவங்களை சொல்லலாம். அதில் ஒன்றைத்தான் இங்கே பார்க்க போகிறோம்.

சிவாஜி ஹீரோவாக வளர்ந்த நேரத்தில்தான் சந்திரபாபு காமெடி நடிகராக உயர்ந்தார். சிவாஜி ஒரு பட நிறுவனத்தில் வாய்ப்பு கேட்டு சென்றால் அங்கு சந்திரபாபுவும் வாய்ப்பு கேட்டு சென்றிருப்பார். அப்படி இருவரும் பல சினிமா கம்பெனிகளில் ஒருவரை ஒருவர் சந்தித்து அறிமுகமாகியுள்ளனர்.

chandrababu

chandrababu

ஒருமுறை ஜெமினி ஸ்டுடியோ நிறுவனத்திற்கு சென்று தன்னை பற்றிய விபரங்களை கொடுத்துவிட்டு சிவாஜி படிக்கெட்டுக்களில் இறங்கி கொண்டிருக்க, சந்திரபாபு வாய்ப்பு கேட்பதற்காக படிக்கெட் ஏறிக்கொண்டிருந்தார். அப்போது கீழே கிடந்த ஒரு ரூபாயை பார்க்காமல் சிவாஜி கடந்து செல்ல, அவரை அழைத்த சந்திரபாபு ‘கீழே காசு விழுந்தது கூட தெரியாம போறியே’ என சொல்லி அந்த காசை எடுத்து சிவாஜி கையில் கொடுத்துள்ளார்.

சிவாஜியோ ‘ரொம்ப நன்றி.. இந்த காசு இல்லனா நடந்துதான் போகணும்’ என சொல்ல, சந்திரபாபு ‘என் நிலைமையும் அதுதான். என்னிடம் ஒரு ரூபாய்தான் இருக்கு’ என சொல்லிவிட்டு சட்டை பையில் தொட்டு பார்க்க அந்த காசு அவரிடம் இல்லை. எனவே, அந்த ஒரு ரூபாய் தான் தவறவிட்ட பணம் என நினைத்து சிவாஜியிடம் ‘அது என் காசு’ என சொல்ல சிவாஜியோ ‘காசு நான் வந்த தடத்தில்தான் கிடந்தது. எனவே, இது எனக்கே சொந்தம்’ என சொல்ல, சந்திரபாபு ‘சரி உன்னிடம் மேலும் ஒரு ரூபாய் இருந்தால் எனக்கு கொடுக்க முடியுமா?’ என கேட்க, சிவாஜியோ ‘என்னிடம் வேறு காசு இல்லை’ என சொல்லிவிட்டார். அதற்கு ‘என்றைக்கு இருந்தாலும் அந்த காசை வாங்காமல் விட மாட்டேன்’ என சிவாஜியிடம் சபதம் போட்டுள்ளார் சந்திரபாபு.

Chandrababu

Chandrababu

அதன்பின், சில வருடங்கள் கழித்து ‘சபாஷ் மீனா’ படத்தில் சிவாஜி ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தில் அவரின் நண்பராக சந்திரபாபுவை நடிக்க வைக்க விரும்பினார் அப்படத்தின் இயக்குனர் பி.ஆர்.பந்துலு. அதற்காக சந்திரபாபுவை தேடி சென்றபோது ‘இப்படத்தில் நான் நடிக்க வேண்டுமானால் எனக்கு சிவாஜியை விட ஒரு ரூபாய் சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டும். எனக்கும் சிவாஜிக்கும் ஒரு ரூபாய் பஞ்சாயத்து ரொம்ப நாளா இருக்கு. அதேபோல், இதை சிவாஜியிடமும் சொல்ல வேண்டும்’ என சந்திரபாபு கண்டிஷன் போடுகிறார்.

sabash

இதை சொன்னால் சிவாஜி கோபப்படுவாரோ என தயங்கிய படியே பி.ஆர்.பந்துலு அவரிடம் சொல்ல சிவாஜியோ ‘அந்த வேடத்திற்கு பாபு நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும். அவன் கேட்டத கொடுத்து அவன புக் பண்ணுங்க’ என்று சொன்னாராம். படப்பிடிப்பு துவங்கிய போது சிவாஜியிடம் வந்த சந்திரபாபு ‘பாத்தியா.. அன்னைக்கு என்கிட்ட ஒரு ரூபா தரமாட்டேன்னு சொன்ன. இப்ப உன்ன விட ஒரு ரூபாய் சம்பளம் சேர்த்து வாங்கிட்டேன்’ என கெத்து காட்ட சிவாஜியோ ‘நான்தான்டா கொடுக்க சொன்னேன்.. போடா போய் நடி’ என்றாராம்.

அதேபோல், சபாஷ் மீனா படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக அப்போதுள்ள புதுமுக நடிகையான மாலினி நடித்தார். ஆனால் சந்திரபாபுவுக்கு ஜோடியாக அப்போது மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்த சரோஜா தேவி நடித்திருப்பார். அந்த அளவுக்கு அத்திரைப்படத்தில் சந்திரபாபுவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் 1958ம் வருடம் வெளியானது.

இந்த படத்தை சுட்டுதான் சுந்தர் சி ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story