Categories: Cinema History Cinema News latest news

என்னை பாட விடாமல் இம்சை பண்ணுவாரு!.. சந்திரபாபுவால் சங்கடத்துக்குள்ளான எல்.ஆர் ஈஸ்வரி..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரமாக மட்டும் இல்லாமல் இயக்குனர், பாடகர் என்று பன்முகத் திறமை கொண்ட நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்திரபாபு.

படத்தை இயக்கி நடித்ததற்காக அந்த காலகட்டத்திலேயே ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பெற்றவர். சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது பல வித்தைகளை கையில் வைத்திருந்தார் சந்திரபாபு. அவர் வாய்ப்பு கேட்கும் பொழுது கூட வித்தியாசமான முறையில்தான் வாய்ப்பே கேட்டார்.

அப்போது சந்திரபாபுவின் நகைச்சுவைக்கு மக்கள் மத்தியில் பிரபலமான வரவேற்பு இருந்தது. அதனால் சந்திரபாபு நடிக்கும் திரைப்படங்கள் அவரது நகைச்சுவைக்காகவே ஓடியது. எனவே தயாரிப்பாளர்களும் அதிகபட்சமாக பல படங்களில் சந்திரபாபுவை நடிக்க வைத்தனர்.

சந்திரபாபுவின் பாடலுக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது புத்தியுள்ள மனிதன் எல்லாம் போன்ற பாடல்கள் அப்பொழுது ஹிட் அடித்த பாடல்களாக இருந்தன. தன்னோடு பணிபுரியும் சக ஊழியர்களை வம்பு செய்வது சந்திரபாபுவிற்கு பொழுதுபோக்கான வேலையாக இருந்தது.

வம்பு செய்த சந்திரபாபு:

போலீஸ்காரன் மகள் என்கிற திரைப்படத்தில் காமெடியனாக நடப்பதற்கு சந்திரபாபுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் பொறந்தாலும் ஆம்பளையா பிறக்கக் கூடாது என்கிற பாடலை சந்திரபாபு பாடினார். அப்பொழுது அந்த பாடலுக்கு பெண் குரலில் பாடுவதற்காக பாடகி எல்.ஆர் ஈஸ்வரி வந்திருந்தார்.

ஆனால் அவர் பாடும் போதெல்லாம் அவர் முன்பு சந்திரபாபு நின்று கொண்டு நகைச்சுவையாக தனது முகத்தை மாற்றி அவரிடம் வம்பு செய்து கொண்டிருந்தார். இதனால் எல்.ஆர் ஈஸ்வரியால் பாடவே முடியவில்லை பிறகு அங்கு வந்த இயக்குனர் கண்களை மூடிக்கொண்டு பாடுங்கள் அவர் எப்போதும் இப்படித்தான் வம்பு செய்து கொண்டிருப்பார். என எல்.ஆர் ஈஸ்வரியிடம் கூறியுள்ளார்.

எல்.ஆர் ஈஸ்வரியும் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு இந்த பாடலை பாடியுள்ளார். இப்படியாக சுற்றியுள்ளவர்களிடமும் நகைச்சுவை செய்யும் ஒருவராக சந்திரபாபு இருந்துள்ளார்.

இதையும் படிங்க: நமீதாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய சரத்பாபு!.. சாகும் முன் அவரின் கடைசி ஆசை?

Published by
Rajkumar