வயிறு வலின்னு ஓடியவர் திரும்ப வரவேயில்ல... எம்ஜிஆரால் நடுத்தெருவுக்கு வந்தாரா சந்திரபாபு...?

எம்ஜிஆர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அயராது உழைப்பாலும் முயற்சியின்மையாலும் உயர்ந்து சினிமாவில் உச்சத்தை தொட்டார். மற்ற நடிகர்கள் யாரும் அவரை நெருங்ககூட முடியாத அளவிற்கு நடிப்பு ஜாம்பவானாக ஒட்டுமொத்த தமிழக மக்களையே தன் ரசிகர்களாகக்கிக்கொண்டார். அவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்த ஒரே நடிகர் எம். ஜி. ஆர் தான். அதனால் தான் அவர் முதல்வரானார் என்றெல்லாம் அன்றைய செய்திகள் கூறியது.
குடும்பத்தின் வறுமை காரணமாக சிறுவயதில் நாடகத் துறையில் ஈடுபட்டு சினிமாவில் சுமார் 25 ஆண்டுகள் முடிசூடா மன்னனாய் விளங்கினார். அதில் நடிப்பு, வசனம் , பாடல்கள் மூலம் மக்களுக்கு பல அறிவுரைகளை கூறிவந்தார். அது தான் மக்களை வெகுவாக கவர்ந்தது. தாம் நடித்த பாத்திரங்களின் மூலம் சோம்பேறியாக தெரியக்கூடாது, உழைப்பே முக்கியமானது, பிறரிடம் கையேந்த கூடாது, உழைப்பு உயர்த்தும் என்னும் பல கருத்துக்களை மக்கள் மனதில் புரியச் செய்தார்.
இப்படிப்பட்ட திரை ஜாம்பவானை வைத்து படம் எடுத்தால் ஒரே படத்திலே கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என பல முன்னணி இயக்குனர்கள் எம்ஜிஆரை இயக்க தவம் கிடந்தார்கள். அப்படித்தான் தமிழ்த் திரையுலகின் தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான ஜே. பி. சந்திரபாபு எம்ஜிஆர் வைத்து " மாடிவீட்டு ஏழை" என்ற பெயரில் படத்தை பூஜை போட்டு இயக்க ஆரம்பித்துள்ளனர். இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடந்துள்ளது மூன்றாவது நாள் ஷூட்டிங்கில் இருந்து யாரிடமும் சொல்லாமல் போய்விட்டாராம் எம்ஜிஆர்.
பின்னர் ஜே. பி. சந்திரபாபு Where is MGR? மிஸ்டர் எம்ஜிஆர் எங்கே? என கோபத்தோடு படப்பிடிப்பு தளம் முழுக்க தேடிவந்தாரம். அங்கிருந்தவர்கள்... உங்களிடம் சொல்லையா? அவர் வயிறுவலின்னு வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாரே என கூற அதிர்ந்து போனாராம் சந்திரபாபு. அதன் பின்னர் எம்ஜிஆர் அந்த படப்பிடிப்பு வரவே இல்லை. இதனால் சந்திரமபு பெரும் நஷ்டம் அடைந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டராம். இதனை மூத்த பத்திரிகையாளர் சுரா பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.