Connect with us
chandrababuchandrababu

Cinema History

வாய்ப்பு கேட்டு போன சந்திரபாபு!. பங்கமாக கலாய்த்த எம்.ஜி.ஆர்!. அப்புறம் நடந்ததுதான் டிவிஸ்டு!..

chandraBabu: தமிழ் சினிமாவில் தனது காமெடிகளின் மூலம் மக்களை அசத்தியவர் நடிகர் சந்திரபாபு. ஆடல், பாடல், நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் சந்திரபாபு. இவர் தமிழில் தன அமராவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின் இவர் மோகன சுந்தரம், புதுமை பித்தன், பாத காணிக்கை போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பொதுவாக யாருக்கும் அடங்காதவரும் கூட. யாரையும் மதிக்க மாட்டாராம். எம்ஜிஆரை கூட மிஸ்டர் ராமசந்திரன் என பெயர் சொல்லிதான் அழைப்பாராம்.

இதையும் வாசிங்க:நம்பாத விஜயகாந்த்.. அவமானத்தை தாண்டி சாதித்து காட்டிய செல்வமணி.. மறக்க முடியாத புலன் விசாரணை…

தனக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் என்பதற்காக எவரையும் நாடி செல்ல மாட்டாராம். அந்த அளவுக்கு இவர் ஆணவம் பிடித்தவராம். இவருக்கும் கண்ணதாசனுக்கும் கூட பல மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மிகக்குறைந்த வயதிலேயே இவரின் சகாப்தமும் முடிந்தது.

ஆரம்பத்தில் நல்ல பணக்காரராய் இருந்த சந்திரபாபு பின் தான் தயாரிப்பாளராக ஆகவேண்டும் என விருப்பப்பட்டதன் விளைவாக தான் இருந்து வீடு முதல் அனைத்தையும் இழந்து மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். திருமண வாழ்க்கை கூட இவருக்கு நல்லபடியாக அமையவில்லை. தான் திருமணம் செய்த பெண் மற்றொருத்தரை காதலிக்கிறார் என அறித்ததும் இவரே அவர்களை சேர்த்து வைத்து விட்டாராம்.

இதையும் வாசிங்க:வன்மத்தை கக்கிய சூர்யா… வெளுத்து வாங்கிய வெற்றிமாறன்… இதெல்லாம் தேவையா பாஸ்?…

இவர் எம்ஜிஆருக்கு நெருக்கமானவராம். ஒரு முறை எம்ஜிஆரிடம் பட வாய்ப்பு கேட்டு சென்றாராம். அப்போது தனது கம்பீரமான நடையுடன் சென்றுள்ளார். ஆனால் எம்ஜிஆரை பார்த்ததும் பயம் வந்துவிட்டதாம். பின் எம்ஜிஆரிடம் தனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

எம்ஜிஆர் ‘நான் என்ன சினிமா கம்பெனியா வைத்து நடத்துகிறேன்… என்னிடம் வந்து கேட்கிறீர்கள்?’ என கலாய்த்து விட்டாராம். பின் சந்திரபாபு தனக்கு ஆடத்தெரியும், பாடத்தெரியும் என கூறினாராம். எம்ஜிஆர் ‘அதற்கு நான் என்ன செய்வது… என் முன்னாடி வந்து எதற்காக இதெல்லாம் செய்கிறீர்கள்… ஏதாவது சினிமா கம்பெனிக்கு போய் இதை செய்து காட்டுங்கள்’ என கூறினாராம். ஆனால் சந்திரபாபுவின் விலாசத்தை மட்டும் வாங்கி வைத்து கொண்டாராம். பின் என்.எஸ்.கிருஷ்ணனிடம் பேசி அவருக்கு வாய்ப்பும் வாங்கி கொடுத்தாராம் எம்ஜிஆர்.

இதையும் வாசிங்க:சார்லி சாப்ளின் வேஷம்தான் உனக்கு சரி… அப்படி சொன்ன பாலசந்தரையே பயப்படவச்ச நாகேஷ்…

google news
Continue Reading

More in Cinema History

To Top