Cinema History
உண்மையை சொன்னதால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த சந்திரபாபுவின் மனைவி… அப்படி என்ன நடந்தது தெரியுமா??
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் சந்திரபாபு. சந்திரபாபு சிறந்த நடிகர் மட்டுமல்லாது நல்ல பாடகரும் கூட. மேலும் நன்றாக நடனமும் ஆடக்கூடியவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
சந்திரபாபு ஷீலா என்ற பெண்மணியை 1958 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். எனினும் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் அவர்கள் பிரிவதற்கு முன்பு ஷீலா தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.
கணவன் மனைவிக்குள் எந்த ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது என்பதை முடிவு செய்த சந்திரபாபு ஒரு நாள் தனது மனைவி ஷீலாவிடம் திருமணத்திற்கு முன் சில பெண்களிடம் தனக்கு தொடர்பு இருந்ததாக வெளிப்படையாக கூறினாராம். தனது கணவர் தன்னிடம் இவ்வளவு வெளிப்படையாக இருக்கிறாரே என்று நினைத்த ஷீலா, தானும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என முடிவு செய்தார்.
ஆதலால் ஷீலா, திருமணத்திற்கு முன்பு தனக்கு இரு இளைஞர்களிடம் தொடர்பு இருந்ததாக கூறினார். இதனை கேட்ட சந்திரபாபு கோபத்தில் கொந்தளித்துவிட்டாராம். ஷீலாவை தனது அறையில் இருந்து வெளியே தள்ளி கதவை பூட்டிக்கொண்டாராம். ஷீலா எவ்வளவோ முயன்றும் அவர் கதவை திறக்கவில்லையாம்.
இனி தற்கொலை செய்துக்கொள்வதை தவிர தனக்கு வேறு வழி இல்லை என முடிவெடுத்தாராம் ஷீலா. எனினும் தனது முடிவை சந்திரபாபுவின் மதிப்பிற்குரிய இயக்குனரான கே.சுப்ரமணியத்திடம் கூறிவிட்டு அதன் பின் தற்கொலை செய்துகொள்வதாக முடிவெடுத்தார். அதன் படி கே.சுப்ரமணியத்திற்கு தொலைப்பேசியில் அழைத்து தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறினாராம் ஷீலா.
உடனே கே.சுப்ரமணியம், சந்திரபாபுவின் வீட்டிற்கு விரைந்து வந்து ஷீலாவை சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்கவைத்தாராம். மறுநாள் சந்திரபாபுவை சந்தித்த கே.சுப்ரமணியம், “நீ செய்வதெல்லாம் சரிதானா? உனக்கு ஒரு நியாயம், உன் மனைவிக்கு ஒரு நியாயமா?” என்றெல்லாம் கேட்டுப்பார்த்தாராம். எனினும் சந்திரபாபு எதற்கும் மசியவில்லையாம். மேலும் ஷீலாவுடன் தன்னை மீண்டும் சேர்ந்து வாழச்சொல்லி வற்புறுத்தினால் தற்கொலை செய்துகொள்வதாகவும் கூறினாராம் சந்திரபாபு.
சந்திரபாபு எதற்கும் ஒத்துவர தயாராக இல்லை என முடிவெடுத்த கே.சுப்ரமணியம், ஷீலாவிடம் சென்று “நீ சந்திரபாபுவை பிரிவதுதான் சரி” என கூறினாராம். அதன் பின்தான் ஷீலாவும் சந்திரபாபுவும் பிரிந்து வாழ முடிவெடுத்தார்களாம்.