37 வயதில் தனது காதலனை அறிமுகம் செய்த ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை!.. இவர் தானா அது?..

shwetha
சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் குறிப்பிடத்தக்க சீரியல் ‘சந்திரலேகா’ சீரியல் ஆகும். 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் கிட்டத்தட்ட 8வருடங்கள் கடந்த நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

shwetha
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக 2000 அத்தியாயங்களுக்கு மேலாக ஓடிய சீரியல் என்றால் அது சந்திரலேகா சீரியல் தான். இந்த சீரியலில் நடிகை சுவேதா பண்டேகர் முதன்மை பாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதையும் படிங்க :‘விஜயசாந்தி’யா மாறிட்டீங்கனா எங்க நிலைமை என்ன ஆகுறது?.. சாக்ஷி கொடுத்த அப்டேட்டால் பரிதவிக்கும் ரசிகர்கள்..
மேலும் நாகஸ்ரீ, முன்னா மற்றும் அருண் குமார் ராஜன் ஆகியோரும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சரிகம என்ற நிறுவனம் தான் சந்திரலேகா சீரியலை தயாரித்து வெளியிட்டது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சுவேதா பண்டேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

shwetha
அதில் தனது காதலனை முதன் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் சுவேதா. 37 வயதாகும் சுவேதா நீண்ட நாள்களுக்கு பிறகு என் இதயத்தை கண்டுபிடித்து விட்டேன் என்று கமெண்ட் செய்து கடவுளுக்கு நன்றி என தெரிவித்து தனது காதலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க :அய்யப்பனும் கோஷியும் தமிழ் படத்தில் நானா… எல்லாம் வதந்தி பாஸ்… ஷாக்கிங் தகவலை சொன்ன முக்கிய பிரபலம்..

shwetha
அதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களையும் சந்தோஷங்களையும் தெரிவித்து வருகின்றனர். நடிகை சுவேதா பண்டேகர் சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் மகள் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலில் சின்னத்திரையில் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.