சிங்கம் 3-க்கு பின் மீண்டும் டெரரான படத்தில் அனுஷ்கா… ஒரு ரவுண்டு வருவாரா?…

Published on: September 21, 2021
anushka
---Advertisement---

anushka

தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கிய ரெண்டு திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. ஆனால், தமிழில் அவருக்கு தொடர் வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு மகேஷ்பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

anushka2

குறிப்பாக அவர் நடித்த ‘அருந்ததி’ தெலுங்கு திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது. தமிழிலும் அவருக்கு ஒரு மார்க்கெட் உருவானது. தொடர்ந்து விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

anushka3

குறிப்பாக சூர்யாவுடன் அவர் நடித்த சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 படங்கள் ரசிகர்களிடம் வெற்றி பெற்றது. எல்லாவற்றையும் விட ராஜமவுலி இயக்கத்தில் அவர் நடித்த ‘பாகுபலி’ திரைப்படம் இந்தியா முழுவதும் அவரை பிரபலப்படுத்தியது.

இஞ்சி இடுப்பழகி என்கிற திரைப்படத்திற்காக உடல் எடையை கூட்டி குண்டாக மாறினார். அப்படம் ரசிகர்களை கவரவில்லை. மேலும், உடல் எடையை குறைக்க முடியாமலும் அவர் சிரமப்பட்டார். எனவே, பட வாய்ப்புகளை இழந்தார். தமிழில், மாதவனுடன் அவர் நடித்த ‘நிசப்தம்’படம் வெளியானது.

anuska5

இந்நிலையில், பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க படக்குழு அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்படத்தில் வடிவேலுவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை அன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் அனுஷ்கா நடித்தால் தமிழில் மீண்டும் அவர் 2வது ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment