More
Categories: Uncategorized

மொத்தமா கதைய மாத்திடீங்களே.! ஆணி வேறே அதுதானே.? ரஜினிக்கு தெரிஞ்சா கோபப்பட போறார்.!?

கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். வித்யாசாகர் இசையமைத்து இருந்தார். ஜோதிகா சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

Advertising
Advertising

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதை. சந்திரமுகி எனும் பெண்ணின் கதை. வேட்டையான வரும் ரஜினி கதாபாத்திரம் கூட வில்லனாக தான் இருக்கும். சரவணன் எனும் கதாபாத்திரத்திலும் கதையின் நாயகனாக ரஜினி கலக்கி இருப்பார்.

மூலகதையே சந்திரமுகி எனும் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி தான் இருக்கும்.  அதில் சூப்பர் ஸ்டார் நடித்தது அப்போது பெரிதாக பார்க்கப்பட்டது. அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

இதையும் படியுங்களேன் – இந்தியன்-2 வேணாம்.. சிவாஜி-2 எடுங்க சார்.! ஷங்கரிடம் கெஞ்சும் ரஜினி ரசிகர்கள்.! காரணம் அதுதான்.!

இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். அதை பி.வாசு தான் இயக்க உள்ளார். வடிவேலு அதே காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் வேட்டையன் கதாபாத்திரம் தான் முதன்மையாக காட்டப்பட உள்ளதாம். முதல் பாகம் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தியது போல, இரண்டாம் பாகம் ஆண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம். சந்திரமுகி என்றாலே அந்த பெண் கதாபாத்திரம் தான். அதனை விடுத்து இப்படி செய்தால் நன்றாக வருமா, இது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தெரியுமா? தெரிந்தால் நல்ல கதையை கெடுத்து விடாதீர்கள் என கோபப்பட போகிறார் என சினிமாவாசிகள் கூறி வருகின்றனர்.

Published by
Manikandan

Recent Posts