ரஜினியின் ஐடியாலஜி! நல்லா வொர்க் அவுட் ஆயிடுச்சு போல – ‘சந்திரமுகி 2’வில் மாஸ் காட்டிய லாரன்ஸ்

Published on: July 31, 2023
rajini
---Advertisement---

ரஜினியின் நடிப்பில் பெருத்த வெற்றி பெற்ற படமாக அமைந்த திரைப்படம் சந்திரமுகி. 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் பி வாசு இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தில் வேட்டையனாக ரஜினி மக்களை வெகுவாக கவர்ந்தார். இந்த நிலையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிக் கொண்டு வருகிறது.

rajini1
rajini1

ரஜினியின் ஒப்புதலுக்குப் பிறகே லாரன்ஸ் இந்த படத்தில் வேட்டையனாக நடிக்கிறார். சந்திரமுகி முதல் பாகத்தில் வேட்டையனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினிக்கு அந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்துப் போக அந்த வேட்டையனின் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்து ஒரு தனி படமாக பண்ண வேண்டும் என நினைத்துக் கொண்டு இருந்தாராம்.

அப்படி உருவானது தான் சந்திரமுகி 2. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ரஜினியால் நடிக்க முடியவில்லை அதனால் லாரன்ஸ் இந்த படத்திற்கு அதுவும் இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக இருப்பார் என நினைத்து அவரை நடிக்க வைத்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த மாதிரியான படங்கள் என்றால் லாரன்ஸுக்கு அசால்ட்டாக லட்டு சாப்பிடுகிற மாதிரி.

rajini2
rajini2

அதுவும் ரஜினி நடித்த படம் என்றால் சொல்லவா வேண்டும். ரஜினி நினைத்ததை போல இந்த இரண்டாம் பாகம் முழுக்க வேட்டையன் கதாபாத்திரம் எப்படிப்பட்டது எப்படி உருவானது என்பதை மையப்படுத்தி தான் அமைய இருக்கின்றதாம். இந்த நிலையில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஒரு வெறித்தனமான போஸ்டர் இன்று வெளியானது.

அதில் கொலை நடுங்க வைக்கும் வகையில் லாரன்ஸ் இன் போஸ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் விடுமுறை தினத்தன்று வெளியானால் அமோக வரவேற்பு கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவிருக்கின்றது.

rajini3
rajini3

காமெடிக்கு என்று சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வடிவேலுவுடன் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சில முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கின்றனர். மேலும் லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

இதில் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இந்தப் படத்தின் ரப் காப்பியை பார்த்த பிரபலங்கள் சிலர் படத்தை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளி இருக்கிறார்களாம். ரஜினியை மிஞ்சும் அளவுக்கு இந்த படத்தில் லாரன்ஸ் வெறித்தனமாக நடித்திருக்கிறாராம். இப்பவே இந்த படம் 100 நாட்களை ஓடும் என்ற அளவுக்கு படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்களாம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.