முன்பெல்லாம் சினிமா நடிகர்களுக்குள் அவர்களின் படம் வெளியாகும் போது தியேட்டர்களில்தான் போட்டி இருக்கும். இப்போது அவர்கள் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் சண்டை போடத் தொடங்கி விட்டார்கள். கடந்த பல வருடங்களாகவே விஜய், அஜித் ரசிகர்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டு வருகிறார்கள். அஜித்துடன் மட்டுமல்ல விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களிடமும் சண்டை போட்டு வருகிறார்கள்.. அதற்கு காரணம் ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன காக்கா கழுகு கதைதான்.
அன்று முதலே விஜய் ரசிகர்கள் ரஜினியை தங்களின் எதிரியாக பார்க்க துவங்கி விட்டனர். ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வெளியான போது முதல் காட்சி வெளியாவதற்கு முன்பே ‘வேட்டையன் டிசாஸ்டர்’ என விஜய் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்தார்கள். ஒருபக்கம் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு சென்சார் பிரச்சனையில் சிக்கியதால் படம் வெளியாகவில்லை. இது, விஜய் ரசிகர்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது.. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் ஜனநாய்கன் படத்தின் இசை வெளியீட்டு விழா டிவியில் ஒளிபரப்பான போது அதன் டிஆர்பி-யை ரஜினியின் சந்திரமுகி திரைப்படம் முறியடித்திருப்பது தெரியவந்திருக்கிறது. ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் விஜயும் கலந்துகொண்டார்.
அதன்பின் இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அன்றைய தினமே சன் டிவியில் ரஜினியின் சந்திரமுகி படம் ஒளிபரப்பப்பட்டது. சந்திரமுகி படம் வெளியாக 21 வருடங்கள் ஆன நிலையிலும்,இதற்கு முன் 30 முறைக்கு மேல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்திருந்த நிலையிலும் சந்திரமுகி 10.36 புள்ளிகளை பெற்றது. ஆனால், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா 6.76 TVR புள்ளிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மிஷ்கின் இயக்கிய…
இந்த பொங்கல்…
தமிழ் திரையுலகில்…
தமிழக வெற்றிக்…
தற்போது புதிதாக…