More
Categories: Cinema News latest news

ஜெய்பீம் படத்தில் சர்ச்சை காட்சி… இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு…

பத்திரிக்கையாளர் ஞானவேல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார்.

விழுப்புரம் அருகே வாழும் இருளர் சமூகத்தினர் சந்தித்த ஒரு பிரச்சனையையும், அவர்களுக்காக வழக்கறிஞர் சந்துரு (பின்னாளில் நீதிபதி சந்துரு) என்பவர் எப்படி போராடி நியாயம் பெற்று தந்தார் என்கிற உண்மை கதையை திரைக்கதை ஆக்கியுள்ளனர். வழக்கறிஞர் சந்துரு வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படம் அமேசான் பிரைமில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

இப்படத்தை ரசிகர்கள், விமர்சகர்கள், திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் என பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

அதேநேரம், இப்படத்தின் ஒரு காட்சியில் காவல் ஆய்வாளரின் வீட்டில் வன்னியர்களின் அக்கினிக் கலச காலண்டர் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலரும் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். வன்னியர் சங்கமும் இதை கண்டித்துள்ளது.

மேலும், இந்த காட்சி தனக்கு தெரியாமல் வைக்கப்பட்டு விட்டது என இப்படத்தின் வசனகர்த்தா கண்மணி குணசேகரனும் தனது முகநூலில் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த காட்சி தற்போது மாற்றப்படவுள்ளது. உள்நோக்கத்தோடு இந்த காட்சி வைக்கப்படவில்லை எனவும், தெரியாமல் நடந்துவிட்டதாகவும் இயக்குனர் கூறியுள்ளதாகவும், இக்காட்சி தொடர்பான இக்கட்டை உணர்ந்து சம்பந்தப்பட்ட காலண்டரை தொழில்நுட்ப ரீதியாக ‘சாமி’ காலண்டராக மாற்ற டெல்லியில் உள்ள அமேசான் அலுவலகத்துக்கு சொல்லிவிட்டதாகவும் மாற்றிய பிரதி அப்டேட் ஆக இரண்டொரு நாள் ஆகுமெனவும் அதிகபட்சம் மூன்று நாட்களில் திருத்தப்பட்டக் காலண்டர் காட்சியோடு வந்து விடுமெனவும் இயக்குனர் உறுதியளித்துள்ளதாக கண்மணி குணசேகரன் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Published by
சிவா