ராசியில்லாத நடிகையா பிரியா பவானி ஷங்கர்? டிமான்டி காலனி2 முதல்நாளால் நடந்த திடீர் மாற்றம்…

by Akhilan |
ராசியில்லாத நடிகையா பிரியா பவானி ஷங்கர்? டிமான்டி காலனி2 முதல்நாளால் நடந்த திடீர் மாற்றம்…
X

Demonte Colony2:அருள்நிதி மற்றும் ப்ரியாபவானி ஷங்கர் நடிப்பில் நேற்று ரிலீசான திரைப்படம் டிமான்டி காலனி 2. இப்படத்தின் பாசிட்டி ரிவியூவால் முதல் நாள் வசூல் குறித்த ஆச்சரிய அப்டேட்கள் வெளியாகி இருக்கிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. அப்படத்தின் தொடர்ச்சியாக அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் நேற்று ரிலீசானது. இப்படத்தின் போட்டியாக விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்துக்கு வலுவான போட்டியாக அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க: நடிகை விஷயத்தில் கமல் செய்த தவறு!.. விக்ரம் படம் பிளாப் ஆனதுக்கு காரணமே அதுதான்!…

முதல் பாகத்திற்கும் இரண்டாவது பாகத்திற்கும் எந்த வித பிசுரும் இல்லாமல் சரியான முறையில் இரண்டும் பின்னப்பட்டிருக்கிறது. திரைக்கதையில் எந்தவித லாஜிக் கோளாறுகளையும் இயக்குனர் அஜய் ஞானமுத்து செய்யவில்லை. இதுவே படத்திற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவ் ரிவ்யூக்களை குவித்து வருகிறது.

இது மட்டுமல்லாமல் சமீபத்திய காலமாக ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான ரத்னம், இந்தியன்2 உள்ளிட்ட படங்களின் தோல்விக்கு அவரின் ராசியை காரணம் என விமர்சிக்கப்பட்டார். இதை தன்னுடைய பேட்டி ஒன்றில் கூட தான் எப்படி அதற்கு காரணமாக முடியும் என வருத்தப்பட்டு பேசியிருப்பார். தற்போது இந்த தடைகளையும் பிரியா பவானி ஷங்கர் உடைத்து இருக்கிறார்.

தன்னுடைய நடிப்பில் முதிர்ச்சி காட்டி சினிமா கேரியரில் அவருக்கென முக்கிய படமாக டிமான்டி காலனி2 தற்போது அமைந்துள்ளது. பாசிட்டிவ் ரிவ்யூக்களால் இன்று பல இடங்களில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிமான்டி காலனி முதல் நாள் வசூல் 3.5 கோடி ரூபாயை குவித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் வார இறுதி நாட்கள் வருவதால் வசூலும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சான்ஸே இல்ல… அந்த விஷயத்துல விக்ரம் மாதிரி ஒரு நடிகரை பார்க்கவே முடியாதாம்..!

Next Story