
Uncategorized
ஓய்வில்லாமல் 56 மணி நேரம் நடிச்சிருக்கேன்… – சார்லியை தொடர்ந்து வேலை வாங்கிய இயக்குனர்கள்!
கோலிவுட்டில் சிறப்பான நடிகராக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தொடர்ந்து துணை நடிகர்களாகவே நடித்து வரும் நடிகர்கள் உண்டு. அந்த வரிசையில் நடிகர் சார்லியும் அடங்குவார்.
தமிழின் முக்கிய நடிகர்கள் பலரோடு சார்லி நடித்துள்ளார். பூவே உனக்காக திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு நண்பர் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் அங்கீகாரம் கிடைக்கும் வகையிலான பெரும் கதாபாத்திரங்கள் இவருக்கு கிடைக்கவில்லை.

charlie
ஆனால் நடிப்பு என வந்துவிட்டால் ஓய்வே இல்லாமல் நடிக்க கூடியவர் சார்லி. 1990 களில் சார்லி அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வந்தார். அப்போதெல்லாம் துணை நடிகர்கள் காலையில் இருந்து இரவு வரை நடிக்க வேண்டும் என்றாலும் நடித்து கொடுத்துதான் ஆக வேண்டும்.
தூக்கம் இல்லாமல் நடிப்பு
இந்த நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்ததால் தூங்கும் நேரம் தவிர பாக்கி நேரம் எல்லாம் சார்லி நடித்துக்கொண்டே இருந்துள்ளார். இந்த நிலையில் காலமெல்லாம் காதல் வாழ்க, பொங்கலோ பொங்கல் ஆகிய இரு திரைப்படங்களில் அப்போது சார்லி நடித்துக்கொண்டிருந்தார்.

charlie
இரு படங்களுமே படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருந்ததால் சார்லியின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டன. இரண்டு படங்களுக்கும் மாறி மாறி நடித்ததில் அவருக்கு தூங்குவதற்கு குளிப்பதற்கு கூட நேரம் இருக்கவில்லை. இப்படியே கிட்டத்தட்ட 56 மணி நேரம் அதாவது 3 நாட்கள் தொடர்ந்து ஓய்வே இல்லாமல் நடித்துள்ளார் சார்லி.
ஒரு பேட்டியில் இந்த நிகழ்வை அவர் பகிர்ந்துள்ளார்.