பிரசாந்த் பட நடிகையை ஏமாற்றி லம்ப்பான அமவுன்ட்டை சுருட்டிய பிரபல நடிகர்… அடக்கொடுமையே!!

by Arun Prasad |   ( Updated:2023-02-20 06:57:50  )
Prashanth
X

Prashanth

தமிழில் “நல்லதொரு குடும்பம்”, “தையல்காரன்”, “கிழக்கே வரும் பாட்டு” போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சர்மிளா. இவர் மலையாள சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர்.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த “நான்”, விக்ரம் பிரபுவின் “இவன் வேற மாதிரி” ஆகிய திரைப்படங்களில் குணச் சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் சர்மிளா. மேலும் தற்போது பல மலையாளத் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Charmila

Charmila

சர்மிளா 1996 ஆம் ஆண்டு கிஷோர் சத்யா என்ற மலையாள நடிகரை திருமணம் செய்துகொண்டார். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக 1999 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

அதன் பின் கடந்த 2006 ஆம் ஆண்டு ராஜேஷ் என்பவரை சர்மிளா திருமணம் செய்துகொண்டார். எனினும் கடந்த 2014 ஆம் ஆண்டு ராஜேஷிடம் இருந்தும் பிரிந்துவிட்டார் சர்மிளா. சர்மிளாவுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. தற்போது ஒற்றைத்தாயாக தனது மகனை வளர்த்து வருகிறார்.

Shakeela

Shakeela

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஷகீலாவுடன் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சர்மிளா, தனது முதல் கணவரான கிஷோர் சத்யா தன்னை பண விஷயத்தில் ஏமாற்றியதாக ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“என்னுடைய முதல் கணவனான கிஷோர் சத்யா, பாப்புலாரிட்டிக்காகத்தான் என்னை திருமணம் செய்துகொண்டான். அப்போது அவன் உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருந்தான். அவன் என்னுடைய புகழை பயன்படுத்தி ஒரு நடிகனாக ஆகிவிட்டான்” என்று கூறிய அவர்,

Kishor Satya

Kishor Satya

“கிஷோர் சத்யாவுக்கு சார்ஜாவில் ஒரு ரேடியோ ஸ்டேஷனில் வேலை கிடைத்தது. அவனுடைய நண்பனின் மனைவிதான் அவனுக்கு அந்த வேலையை வாங்கித்தந்தார். தனது நண்பனின் மனைவியோடு கிஷோர் உல்லாசமாக இருந்தான். இது எனக்கு தெரியாது. 4 வருடங்களாக என்னை பார்க்க இந்தியாவுக்கு அவன் வரவேயில்லை.

அதன் பின் ஒரு முறை சார்ஜாவுக்குச் சென்று அவனை பார்த்தேன். அங்கே அவன் நிறைய கடன் வாங்கிவிட்டதாக கூறி என்னை வைத்து நடன நிகழ்ச்சிகளை நடத்தினான். அதில் அவன் நிறைய சம்பாதித்தான். அதன் பிறகுதான் அவன் தனது நண்பனின் மனைவியுடன் உறவில் இருப்பது தெரியவந்தது.

Charmila

Charmila

நான் அப்போது கர்ப்பமாக இருந்தேன். அவன் அந்த பெண்ணின் பேச்சை கேட்டு என் கர்ப்பத்தை கலைக்கச் சொன்னான். உடனே நான் அவனுக்கு ஒரு கும்புடு போட்டுவிட்டு இந்தியா கிளம்பி வந்து அவனை டைவர்ஸ் செய்துவிட்டேன். மேலும் அப்போது எனக்கு 21 வயதுதான். ஒரு குழந்தையை வளர்க்க அப்போது எனக்கு தைரியம் இல்லை. ஆதலால் நான் கருக்கலைப்பு செய்துவிட்டேன்” எனவும் அப்பேட்டியில் கூறியுள்ளார். சர்மிளாவின் இந்த பேட்டி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: விஜய் தலையில் முடி இல்லாமல் போனதற்கு இதுதான் காரணம்… இவ்வளவு ஓப்பனாவா பேசுறது!!

Next Story