12 வருடங்களாக இருந்த நட்பை முறித்த இயக்குனர்.. விஜய் சேதுபதி மேல் அப்படி என்ன கோபம்?!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. சினிமாவிற்குள் வந்த குறுகிய காலத்திலேயே மிக அதிகப்படியான ரசிகர்களை தன்னகத்தே வைத்து இன்று டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த விஜய்சேதுபதியை ஒரு ஹீரோவாக்கி அழகு பார்த்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறக்கினார்.
அந்த படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அந்தப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி திரையுலகில் மிகவும் பரீட்சையமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்று மக்கள் மனதை வென்றிருக்கிறார் விஜய்சேதுபதி.
வந்த குறுகிய காலத்தில் 50 வது படத்தை நெருங்கியிருக்கிறார். இந்த நிலையில் ஏற்கெனவே பல மேடைகளில் பேசிய விஜய்சேதுபதி தன்னுடைய 50வது படத்தை சீனு ராமசாமி தான் இயக்க வேண்டும் என கூறியிருக்கிறார். விஜய்சேதுபதியுன் தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மாமனிதன் போன்ற 4 படங்களை 12 வருடத்தில் சீனு ராமசாமி இயக்கியிருக்கிறார்.
இதனால் 50வது படத்தை அவர்தான் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இந்த நிலையில் நேற்று ஒரு விழாவில் பேசிய சீனுராமசாமி ‘விஜய் சேதுபதியின் நடிப்பு உலகம் முழுவதும் தெரிய வேண்டும். மாமனிதன் படம் வெறும் 20 சதவீதம் பார்வையாளர்களுடன் தான் திரையரங்குகளில் ஓடியது, ஆனால் ஆஹா OTT மூலம் 51 கோடி வசூலித்துள்ளது . இனி விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர வாய்ப்பு இல்லை.
12 வருடங்களில் விஜய் சேதுபதியை வைத்து நான்கு படங்கள் இயக்கியுள்ளேன். நான் இறந்தாலும் இந்தப் படங்கள் பேசும்.’ என வெளிப்படையாக கூறியிருந்தார்.
இப்போது இந்த பேச்சுதான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் விஜய்சேதுபதியின் 50 வது படத்தை குரங்குபொம்மை இயக்குனர் நித்திலன் இயக்க இருப்பதாக கூறுகிறார்கள்.
இதையும் படிங்க : யானை மிதிச்சு செத்துருப்பேன்… படப்பிடிப்பில் நிழல்கள் ரவிக்கு நடந்த விபரீதம்…