கமலின் விக்ரம் படத்தில் மற்றுமொரு மலையாள நடிகர்.. லிஸ்ட் பெருசா போகுது!

மாஸ்டர் படத்தின் வெற்றியையடுத்து லோகேஷ் கனகராஜ் தற்போது கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கமலுடன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், 'அஞ்சாதே' நரேன், ஷிவானி, மைனா நந்தினி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
தற்போது இவர்களுடன் மற்றுமொரு மலையாளப்பட நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் தயாரித்து வரும் விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.
கமல் ஒய்வு பெற்ற போலீஸ், விஜய் சேதுபதி கேங்க்ஸ்டர், பாகாத் பாசில் விஞ்ஞானியாகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் அறிவிப்பு வெளியானபோதே ஒரு டீசரும் வெளியானது. அதில் கமல் நரைத்த முடி, தாடியுடன் சற்று வயதான தோற்றத்திலே காணப்பட்டார்.

chemban vinod
இந்நிலையில், இதில் பிளாஷ்பேக் காட்சியில் கமல் இளமையான தோற்றத்தில் வருவதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் என்பதால் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளார்கள்.
மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கும் இப்படத்தில் மேலும் ஒரு வரவேற்பதாக மலையாள நடிகர் செம்பன் வினோத் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் 'கோலிசோடா 2' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'சார்லி' படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது இவர் விக்ரம் படத்தில் இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.