கங்குவா திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியிருக்கின்றது.
கங்குவா திரைப்படம்: நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் திரைப்படம் கங்குவா. பீரியட் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். மேலும் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஜாலி போலீசாக வைப் பண்ணும் கார்த்தி!… டீசரே சும்மா தாறுமாறா இருக்கே?!… கம்பேக் கொடுப்பாரா?…
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து இருக்கின்றார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கின்றார். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் இப்படம் வெளியாக இருக்கின்றது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தை திரையிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அர்ஜுன் லால் என்பவரிடம் ஸ்டூடியோகிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரூபாய் 10 கோடி 35 லட்சம் கடன் பெற்று இருக்கின்றார். ஆனால் தற்போது அர்ஜுன் லால் காலமாகிவிட்டார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இதுவரை அவர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை திருப்ப செலுத்தவில்லை என்று கூறப்பட்டது.
கடனை திரும்பி செலுத்தாத காரணத்தால் அவரது குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 10 கோடியை வரும் 13ஆம் தேதிக்குள் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
அதை தொடர்ந்து கங்குவா படத்திற்கு வேலை பார்த்து கொடுத்த பியூவல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை கொடுக்கவில்லை என்று கூறி புதிய வழக்கு ஒன்று தொடர்ந்தது. அந்த வழக்கையும் விசாரணை செய்த உயர்நீதிமன்றம் கங்குவா படக்குழு 1.60 கோடியை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: சொல்ல முடியாது!… விஜய் படத்தின் பார்ட் 2-ல எஸ்கே நடிக்கவும் வாய்ப்பிருக்கு?!… வேற லெவல்!…
பணத்தை டெபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிட முடியாது என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று படத்தின் தயாரிப்பாளர் அந்த பணத்தை டெபாசிட் செய்துவிட்டார். அது மட்டும் இல்லாமல் அர்ஜுன் லாலுக்கு வழங்க வேண்டிய பணத்தில் 6 கோடி 41 லட்சம் ரூபாயை செலுத்தி விட்டார்.
மீதி பணத்திற்கு அவகாசம் வழங்கும் படி அனுமதி கோரி இருந்த நிலையில் இதனை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் வரும் 31ஆம் தேதிக்குள் மீதி 3 கோடியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…