More
Categories: Cinema News latest news

இதுக்கெல்லாம் நான் ஆளு இல்ல! – தேடி வந்த இயக்குனரை விஜய் வீட்டுக்கு திருப்பி அனுப்பிய சேரன்

Cheran: தமிழ் சினிமாவில் ஒரு எதார்த்தமான இயக்குனர் என்றால் அது சேரன்தான். அவர் எடுத்த படங்களில் ஒரு வித ஏக்கம் இருக்கும்.  நம் வாழ்க்கையில் எங்கேயோ பார்த்த நடந்த சம்பவங்களை அப்படியே படம் பிடித்ததை போன்ற ஒரு வாழ்வியல் சம்பவங்களைத்தான் படமாக எடுத்திருப்பார்.

அப்பாடா ஒரு நல்ல படம் பார்த்துவிட்டோம் என்ற ஒரு நிம்மதியை சேரன் கண்டிப்பாக கொடுத்திருப்பார். அதுமட்டுமில்லாமல் ஊர் சொல் வழக்கு என ஒன்று இருக்கும். அந்தந்த ஊர் சொல் வழக்குப்படி பேசும் வசனங்களும் மனதில் நின்று பேசும்.

Advertising
Advertising

இதையும் படிங்க: தமன்னா காட்டுனா மட்டும் பாப்பீங்களா? சென்சாரை கிழித்தெடுத்த மன்சூர் அலிகான்

இப்படி இதுவரை ஒரு திறமையான இயக்குனராகத்தான் சேரன் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறார். இயக்குனராக மட்டுமில்லாமல் ஒரு நல்ல நடிகராகவும் அறியப்பட்டவர். எல்லாவித உணர்வுகளையும் எந்தவொரு மிகைத்தன்மையும் இல்லாமல் வெளிக்காட்டுபவர்.

அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக ஆட்டோகிராப் படம் அமைந்தது. வசூலிலும் விமர்சனத்திலும் ஆட்டோகிராப் பெரும் சாதனையை படைத்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுக்கும் போது சில சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்தார்.

இதையும் படிங்க: எல்லா ரெக்கார்டும் காலி!.. நிஜமாவே நம்பர் ஒன் என நிரூபித்த விஜய்.. லியோ அதிகாரப்பூர்வ வசூல் இதோ!..

அவருக்கு போலீஸ் மீது எப்பொழுதுமே ஒரு தனி மரியாதை இருக்குமாம். அதற்கு காரணம் போலீஸிடம் இருக்கும் பவர். அந்த பவரை பயன்படுத்தி மக்களை நல் வழியில் கொண்டு செல்ல வேண்டும். அதை பெரும்பாலான போலீஸார் செய்து வருகின்றனர் என கூறினார்.

அதனாலேயே தான் இயக்குனர் பொறுப்பு என்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இதிலும் அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறினார்.

இதுவரை நான் என்னுடைய லைனிலிருந்து தாண்டியது இல்லை. அதாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்த பிறகு பக்கா கமெர்ஷியல் படம், முன்னனி நடிகைகளுடன் டூயட் என எனக்கு மிகையானதை நான் செய்ததே இல்லை என்றும் கூறினார்.

இதையும் படிங்க: கண்ட்ரோல் பண்ணி பாருங்க!.. பளிங்கு மேனியை காட்டி பாடாப்படுத்தும் ஜெயிலர் பட நடிகை…

ஆட்டோகிராப் பட வெற்றிக்கு பின்னாடி கூட ஒரு இயக்குனர் என்னிடம் கதை சொல்ல வந்தார். அந்தக் கதைப்படி 7 சண்டைக் காட்சிகள், 4 கார் சேஸிங் சீன்கள், 4 பாடல்கள் என அவர் கதை சொல்லும் போதே டமார் டமார் என சிதறியது.

உடனே அவரை நிறுத்திவிட்டு ‘இந்தா பாரு தப்பான அட்ரெஸுக்கு வந்துட்ட. இதுக்கு சரியான ஆள் இருக்கக் கூடிய ஏரியா திருவான்மீயூர்’ என விஜய் வீட்டு  முகவரியை சொல்லி அனுப்பி விட்டாராம்.

Published by
Rohini