பம்பர் ஹிட் ஆன சேரனின் படம்!.. நடிக்கமாட்டேனு சொன்னவங்களின் நிலைமை இப்ப என்னாச்சுனு தெரியுமா?..
தமிழ் கலாச்சாரம், பண்பாடு இவைகளை தங்கள் படங்களின் மூலம் முன் நிறுத்துபவர்களின் பட்டியலில் முக்கியமானவர்கள் இயக்குனர்கள் தங்கர் பச்சான், அமீர், சேரன் முதலானோர். இவர்களின் படங்கள் பெரும்பாலும் குடும்ப பின்னனியில் அமைக்கப்பட்ட படங்களாக இருந்தாலும் அதன் உள்கருத்துக்கள் சிந்திக்க கூடியவையாக இருக்கும்.
சேரன் முதலில் நடிக்க வேண்டும் என ஆசையில் தான் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் சிலபல காரணங்களாக உதவி இயக்குனராக வந்து அதன் பின் இயக்குனராக மாறி சில வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். தங்கர் பச்சானின் சொல்லமறந்த கதை என்ற படத்தில் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமாகிறார் சேரன்.
இதையும் படிங்க : அந்த மூடில் இருக்கும் போது சந்திரபாபு ஓவரா பேசுவார்… என்னப்பா இப்படி?
சேரன் இயக்கிய படமான ஆட்டோகிராப் படம் இளைஞர்கள் மனதில் கொடி கட்டி பறந்த திரைப்படமாகும். ஆனால் இந்த படத்தில் முதலில் பிரபு தேவாவை தான் ஒப்பந்தம் செய்திருக்கிறார் சேரன். ஆனால் பிரபுதேவாவிற்கு கொடுக்க வேண்டிய முன்பணத்தை கொடுக்க காலதாமதமானதால் பிரபு தேவா நடிக்கமாட்டேனு சொல்லிவிட்டாராம். நடிகர் ஸ்ரீகாந்தையும் அணுகியிருக்கிறார். அந்த சமயத்தில் ஸ்ரீகாந்த் ஏப்ரல் மாதத்தில் படத்தின் ரிலீஸில் இருந்ததால் அது பெரிய ஹிட் படம் என்பதால் அவரும் இந்த படத்தில் நடிக்க மாட்டேனு சொல்லிவிட்டாராம்.
நடிகர் விக்ரம் சம்மதித்து வந்திருக்கிறார். ஆனால் விக்ரம் ஒரு நல்ல கதைக்காக இருந்த நேரம் அது. ஆட்டோகிராப் படம் கமிட் ஆனதும் ஜெமினி படத்திற்காக ஆஃபர் வந்திருக்கிறது. கமெர்ஷியல் படம் என்பதால் ஜெமினி முடித்துவிட்டு வருகிறேன் என்று விக்ரமும் சென்று விட்டாராம். வேறு வழியில்லாமல் சேரனே இந்த படத்தில் ஹீரோவாக வேண்டிய கட்டாயம். ஆனால் படம் ரிலீஸாகி அமோக வெற்றியடைந்தது. இந்த படத்தை உதாசினப்படுத்திய பிரபுதேவா,ஸ்ரீகாந்த் ஒரு வேளை இந்த படத்தில் நடித்திருந்தால் அவர்கள் கெரியரில் ஒரு திருப்பு முனை ஏற்படுத்திய படமாக ஆட்டோகிராப் அமைந்திருக்கும். ஆனால் இதில் விதிவிலக்கு நடிகர் விக்ரம். அவருடைய வெற்றி இப்போது ஹிமாலய வெற்றியாக இருக்கிறது.