அஜித்தை ரசிகர்களை நேரில் சந்திக்காமல் தவிர்ப்பதற்கு இதான் காரணமா? என்ன நடக்கிறது? வெளிவந்த தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் ரசிகர்களை உண்மையிலேயே சந்திக்க தவிர்க்கின்றாரா இல்லை அதை அவரை செய்ய யாரும் தூண்டுகிறார்களோ என பெரிய சர்ச்சை கேள்வி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அமராவதி படம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அஜித் குமார். அதிக தோல்வியை சந்தித்தாலும் இன்று வரை அவரின் ஒவ்வொரு படங்களுமே ரசிகர்களுக்காக அவரின் மெனக்கெடல் அதிகமாகவே இருக்கும். சினிமாவிற்கே புதிதான ஒரு முகம். யாருடைய சிபாரிசும் இல்லாமல் வாய்ப்பு தேடியவருக்கு பல இடங்களில் ஏமாற்றமே மிஞ்சியது.
அஜித் நடிப்பில் வெளியான பவித்ரா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. 1995வது ஆண்டில் வெளியான ஆசை திரைப்படம். சினிமாவை போல மோட்டார் பந்தயத்தின் மீதும் அதீத காதலுடன் இருந்தவர் அஜித். ஒரு போட்டியின் போது அவருக்கு ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார். அதன் பின்னர் சரண் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
அரசியல் பிரமுகர்கள் பிரபலங்களை விழாக்களில் கலந்து கொள்ள மிரட்டுவதாக பகிரங்கமாக கூறியதை அடுத்து மோசமாக விமர்சிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் வெளிவிழாக்களில் தலை காட்டுவதை அறவே தவிர்த்து வருகிறார்.
அஜித் தன் பெயரை வைத்து தவறான வழியில் சில பணம் பறிப்பதாக வந்த புகாரை அடுத்த 2011ம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களை கலைத்தார். இதனால் அவரினை அதிகாரப்பூர்வமாக ரசிகர்களால் பார்க்க முடியாத நிலை உருவானது.
தொடர்ந்து, தன்னுடைய எந்த படத்தின் விழாவிற்கும் அஜித் பங்கேற்பது இல்லை. இதனால் ரசிகர்கள் எப்போதாவது அரிதாக அஜித்தை பார்த்தால் மட்டுமே உண்டு. அஜித்திற்கு ஏன் ரசிகர்களை பார்க்கும் ஆவலே இல்லையா எனக் கேட்டால்? அவருக்கு நிறைய ஆசை இருக்கிறது.
அப்படி இல்லாத பட்சத்தில் அவர் விரும்பாத பட்சத்தில் அவர் குறித்த எந்த வீடியோவோ, புகைப்படமோ வெளிவராதே. சமீபத்தில் கூட அஜித் கூறிய ஒரு பொன்மொழி கூட இணையத்தில் வைரலானது. இந்நிலையில், அஜித்திற்கும் ரசிகர்களை பார்க்கும் ஆசை இருக்கத்தான் செய்யும். சமீபகாலமாக அஜித்தை யாரோ இயக்கி கொண்டிருப்பதாக செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
அது ஒரு ஆளோ, குழுவோவாக இருக்கலாம். முன்னாளில் இருந்த அஜித் குமார் மாதிரி இப்போ அவர் இருப்பது இல்லை. இதை அவர் தரப்பு தான் ரசிகர்கள் கூட்டம் வைத்து வெளியில் கொண்டு வர வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.