Cinema News
அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்!.. மீண்டும் உடல்நிலை பாதிப்பா?.. கொளுத்தி போட்ட பிரபலம்!..
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தை முடித்த கையோடு அமெரிக்கா செல்ல இருப்பதாக சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியிருக்கின்றார்.
Actor Rajinikanth: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து நடித்து வருகின்றார் நடிகர் ரஜினிகாந்த். 74 வயதை தொடப்போகும் நடிகர் ரஜினிகாந்த் தற்போதும் இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார்.
இதையும் படிங்க: அடி மேல் அடிவாங்கும் லைகா.. கதைத்திருட்டு சர்ச்சையில் விடாமுயற்சி.. எங்க போய் முடியப்போகுதோ..
ரஜினிகாந்தின் கடைசி படம்:
நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக எல் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சுமாரான படமாகவே வேட்டையன் படம் அமைந்திருந்தது.
ரஜினிகாந்தின் கூலி:
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது. நடிகர் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் அமீர்கானை இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
உடல்நிலை குறைபாடு:
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் வழக்கமான பரிசோதனை என்று கூறினாலும் பின்னர் அறுவை சிகிச்சை என்று கூறியது அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
அதிலும் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்தை சிரமப்படுத்தி காட்சிகள் எடுத்த காரணத்தால்தான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என்று பலரும் லோகேஷை திட்டி வந்தார்கள். இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் கூறுகையில் அறுவை சிகிச்சை தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே தங்களிடம் கூறி இருந்ததாகவும், அதற்கு ஏற்ற வகையில் தான் படப்பிடிப்பு நாட்களை நாங்கள் திட்டமிட்டோம் என்று கூறி வதவிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அமெரிக்கா பயணம்:
நடிகர் ரஜினிகாந்த் வரும் 12ஆம் தேதி தன்னுடைய 74 வது பிறந்தநாளை கொண்டாட இருக்கின்றார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்களின் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு தனது பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.
இதையும் படிங்க: நெகட்டிவிட்டிய இக்னோர் பண்ணி செம பிஸியான தனுஷ்… கேட்கவே சும்மா அதிருதே!..
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. தனது பிறந்த நாளை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு பயணம் செல்ல இருக்கின்றார். அங்கு தனது முழு உடல் பரிசோதனைக்காக செல்ல இருப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் ரஜினிகாந்துக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லையா? என்று அவரது ரசிகர்கள் கவலைப்பட்டு வருகிறார்கள்.