சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து பிரபல பத்திரிகையாளர் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எடுத்து வந்தனர். சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இப்படத்திற்கு முன்னதாக சூர்யா எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
அதைத்தொடர்ந்து பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் இணைந்து நடித்து வந்தார். பிறகு அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். வணங்கான் படத்திற்குப் பிறகு சூர்யா ஒப்பந்தமான திரைப்படம் தான் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கின்றார். இப்படத்தில் நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
அக்டோபர் 10ஆம் தேதி இந்த திரைப்படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் நடிகர் சூர்யா இப்படத்தில் 10-க்கும் மேற்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இப்படத்தில் சூர்யா நடித்து வருவதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கின்றது. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானலில் அடர்ந்த காட்டுப்பகுதி, பாங்காங் உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பேசியிருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது கங்குவா திரைப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி இருக்கின்றது.
இப்படத்தின் காட்சிகள் அனைத்தும் மிக சிறப்பாக வந்து உள்ளதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தின் சண்டை இயக்குனர் தெரிவித்த போது இப்படத்தில் நான்கு விதமான சண்டைக் காட்சிகள் இருக்கின்றது. அனைத்து காட்சிகளும் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது. அதிலும் அண்டர் வாட்டரில் நடக்கும் ஒரு சண்டைக்காட்சி தமிழ் சினிமாவில் அல்ல இந்திய சினிமாவிலேயே இதுவரை கண்டிராத ஒரு சண்டைக் காட்சியாக இருக்கும் என்று கூறியதாக அவர் தெரிவித்திருந்தார்.
Pushpa2 Review:…
Power Star: தமிழ்…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…