குட்டி ரஜினியாக கலக்கியவரும்.. தவக்களையும்!.. அவர்களுக்கு என்னாச்சி தெரியுமா?..

tavakalai 2
நடிகர்களின் இளம் வயது கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க குழந்தை நட்சத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதுண்டு. அதில் இந்த நடிகர் இளம் வயதில் இப்படித்தான் இருந்திருப்பார் என யோகாசிக்க வைக்கக்கூடிய அளவில் நடித்திருப்பர்.
ரஜினிகாந்த் மாணவனாக காட்டப்பட்ட படங்களில், "குட்டி ரஜினி" யாக திரையில் வலம் வந்தவர் சூரிய கிரண். ரஜினிகாந்தின் உடல் மொழி, அசைவு என அனைத்தையும் அப்படியே உள்வாங்கி நடித்து அசத்தியவர். கிட்டத்தட்ட 200 படங்களில் குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்த இவர்,
"குட்டி ரஜினி" யாக நடித்த படங்கள் அனைத்திலும் இவரது நடிப்பு வியக்க வைத்திருக்கும். குறிப்பாக "படிக்காதவன்" படத்தில் தம்பியுடன் சென்னைக்கு வந்து உணவு, இருப்பிடத்திற்கே கஷ்டம்.

rajini young
அதனை இளம் வயது ரஜினி எப்படி எதிர்கொள்கிறார்?. இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் சூர்ய கிரண். தலை முடி கோதுவது, கை அசைப்பது போன்ற காட்சிகளில் அப்படியே ரஜினியை பார்ப்பது போலவே இருக்கும் இவரது நடிப்பு. இந்த திறமையோ இவருக்கு பெரிய எதிர்காலத்தை கொடுக்கும் என நம்பப்பட்ட நிலையில் இவரது சினிமா வாழ்க்கை எதிர்பாராத காரணங்களால் பாதியிலேயே நின்று போனது. இவரது தங்கையும் கூட இளம் வயதிலே இருந்து சினிமாவில் நடித்து வருபவர்.
இப்படி சினிமாவோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இவர் சமீபத்தில் மரணமடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இவரைப்போல பாக்யராஜால் முன்னுக்கு வந்தவர் சிட்டிபாபு.. தவக்களைன்னு சொன்னா இவரு முகம் நம்ம கண் முன்னாடி வந்து நிற்கும்.

thavakalai1
ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அங்கே நின்று கொண்டிருந்த இவரின் மீது பாக்யராஜின் கவனம் திரும்ப இவர் வாழ்வில் அடித்தது பம்பர் "முந்தானை முடிச்சு" திரைப்படத்தில் ஊர்வசி கூட கலாட்டா பண்ற அந்த மூன்று சிறுவர்களில் ஒருவராக வருபவர் இவர். அந்த படத்திற்கு பிறகு ஏராளமான படங்களில் நடித்த இவர் வாழ்க்கையில் விதி விளையாட இவர் இயற்கையடைந்து விட்டார்.